இந்திய அணியில் இவர் இல்லாதது அவர்களுக்கு பெரும் இழப்பாக அமையும் – ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கருத்து

Langer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான மூன்று விதமான இந்திய அணியும் சமீபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி உதவியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.

INDvsAUS

- Advertisement -

இந்த தொடருக்கான மூன்று விதமான இந்திய அணிக்கும் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் டெஸ்ட் தொடரில் மட்டும் முதல் போட்டிக்கு பிறகு அவர் இந்திய அணியில் இருந்து விலகுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மீதமுள்ள 3 போட்டிகளுக்கு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விலகல் குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி மூன்று போட்டிகளில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். என்னை பொறுத்தவரை அவர் ஒரு தலைசிறந்த வீரர். அவரின் ஆட்டம் தனித்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்ல பீல்டிங்கிலும் அவர் அதிக சக்தியுடைய வீரர்.

kohli 2

தற்காலத்தில் உள்ள வீரர்களை விட சுறுசுறுப்பாக செயல்பட கூடிய வீரர் என லாங்கர் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்புவதால் அவரின் முடிவை மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் இல்லாதது டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியையும் அது சுலபமாக்கும் எனவும் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

indvsaus

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியை நொறுக்கி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement