1.5 பில்லியனில் 11 பேர் அப்போ கஷ்டமாதான இருக்கும். எங்களுக்கு வருத்தமில்லை – ஆஸி கோச் பேட்டி

Langer
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள், டி20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்களைக் குவித்தது.

pant

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் மட்டும் எடுத்து இருந்ததால் அவுஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை வகித்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த வெற்றியால் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. பல வருடங்களாக பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றியை மட்டும் கண்டு வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது தோல்வியை கண்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.

IND-1

இந்திய அணியின் இந்த வெற்றிக்காக அனைவரும் தங்களது பாராட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 4வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியா டிவி சேனலுக்கு ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசியிருக்கிறார். அப்போது பேசிய அவர் :

ind

“ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். மொத்தம் 1.5 பில்லியன் இந்தியர்கள் உள்ளனர். அதில் சிறந்த 11 வீரர்களுடன் விளையாடினால் அது கண்டிப்பாக கடுமையானதாக தான் இருக்கும். உண்மையிலேயே இந்தியர்கள் சிறப்பாக விளையாடினார்கள்” என்று பேசியுள்ளார் ஜஸ்டின் லாங்கர்.

Advertisement