இவருக்கு பயிற்சி கொடுக்க கோச் வேண்டாம். அவரே தப்பை சரி செய்ஞ்சிக்குவாரு – ஆஸி கோச் பேட்டி

Langer
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.

Rohith

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களையும் பல்வேறு முன்னாள் வீரர்கள், நிபுணர்கள் என அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்த தொடரில் ஸ்மித்தின் மோசமான ஆட்டம் குறித்து பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடும் போது நீங்கள் எவ்வாறு ரசிப்பீர்களோ அதேபோன்றுதான் நானும் ரசிப்பேன். இந்த தொடர் இதுவரை அவருக்கு சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் அவர் தவறுகளை சரிசெய்து மீண்டும் பலமாக திரும்புவார். அவருக்கு நான் பயிற்றுவிக்க மாட்டேன் அவர் தானாகவே தனது பயிற்சிகளை மேற்கொள்கிறார். மேலும் போட்டியின் போது அதிக பந்துகளை எடுத்துக்கொண்டு அவர் தனது மோசமான பார்மை மாற்றுவார்.

அவர் பிரச்சினைகளை எளிதில் தீர்ப்பவர் அதுமட்டுமின்றி அவர் எவ்வளவு பெரிய சிறந்த வீரர் என்பதும் நமக்குத் தெரியும், எனவே அவர் விரைவில் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவார் என்று ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் மொத்தம் நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி 10 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதில் இரண்டு முறை அவர் அஸ்வினிடம் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

smith

ஐ.சி.சி வெளியிட்ட சமீபத்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்த மோசமான ஆட்டம் காரணமாக தனது முதலிடத்தை இழந்துள்ளார். தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தட்ட்த்து.

Advertisement