அவங்க 2 பேரை பத்தி எங்களுக்கு எந்த கவலையும் இல்ல. சண்டைக்கு நாங்க ரெடி – ஆஸி கோச் சவால்

Langer
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் குறித்த தகவல்களே அதிக அளவில் பரவிவருகின்றன. ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது தொடரில் விளையாட தயாராக உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்க உள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டதால் இம்முறையும் சில தொடர்களை கைப்பற்ற தீவிரம் காட்டும்.

அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழி வாங்கும் விதமாக இந்திய அணியை வீழ்த்தி ஆக வேண்டுமென்று மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Bumrah-1

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் இந்திய பந்துவீச்சாளர்களை பாராட்டி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் உள்ள உலகத்தரமான பவுலர் என்றால் அது ஜஸ்பிரித் பும்ரா தான். மேலும் அவருடன் முகமது சமி சிறப்பாக கூட்டணி அமைத்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஐபிஎல் தொடர் மற்றும் சில தொடர்களில் அவர்களது செயல்பாடு சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இந்த தொடரில் ரோகித் மற்றும் இஷாந்த் இல்லாதது குறித்தெல்லாம் தாங்கள் கவலை கொள்ளவில்லை என்றும் மற்ற வீரர்கள் கொடுக்கும் நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் தயாராகியுள்ளதாகவும் லாங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் பௌலிங் குழு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Ishanth

அது மட்டுமன்றி எஞ்சிய பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இவர்களை பார்த்து பயப்பட போவதில்லை. எங்களிடம் தரமான பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர். இந்திய பவுலர்களை எங்களது பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement