இந்திய வீரர்கள் இத்தனை பேருக்கு காயம் ஏற்பட இதுவே காரணம் – ஆஸி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேட்டி

Langer

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர் என பெரிய சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகியவை நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.

Ashwin

இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே இந்தியாவில் கிட்டத்தட்ட பத்து வீரர்களுக்கு மேல் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறி உள்ளனர். மேலும் வரும் வெள்ளிக்கிழமை துவங்க உள்ள கடைசி போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலேயே பெரும் சவால் இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த இந்திய வீரர்களின் தொடர் காயங்களுக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடர் எனக்கு பிடித்தமான தொடர்கள் ஒன்றுதான். அதில் இளம் வீரர்கள் தங்களுடைய திறனை மெருகேற்றி சர்வதேச உலகிற்கு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

குறிப்பாக ஷாட்டர் பார்மட் கிரிக்கெட்டில் ஐபிஎல் என்பது வேற லெவல். ஐபிஎல் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அது சரியான நேரத்தில் நடைபெறவில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த சீசனில் வீரர்களுக்கு ஏற்படும் தொடர் காயங்களுக்கு ஐபிஎல் காரணமாக இருக்குமோ ? என யோசிக்க தோன்றுகிறது. இதனை பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.

- Advertisement -

jadeja

ஏற்கனவே இந்திய அணியில் காயம் காரணமாக ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அதைத்தொடர்ந்து இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், ஜடேஜா, அஸ்வின் மற்றும் விஹாரி, பும்ரா என பல இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் வார்னர், பின்ச், ஸ்டாய்னிஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.