பந்துவீச்சில் இவர்கள் இருவர் தான் இந்திய அணியின் மிகப்பெரிய பலம் – ஆஸி கோச் பேட்டி

Langer

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட “பார்டர் கவாஸ்கர்” டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

indvsaus

இதனால் தற்போது டெஸ்ட் போட்டி 1-1 என சமநிலையில் இருக்கிறது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொள்ள சிட்னி வந்தடைந்தனர். கொரோனா பரவி வருதாக சிட்னி மற்றும் பிரிஸ்பேன் வரும் அனைவருக்கும் கொரோனா பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய வீரர்கள் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சிட்னியில் நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் இந்திய அணியின் பலம் குறித்து கருத்து தெறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜஸ்டின் லங்கர் “இந்திய வீரர்கள் அனைவரும் கடந்த சில டெஸ்ட் போட்டிகளாகவே சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இரு அணி வீரர்களும் பந்தை ஸ்விங் செய்தனர். இதனால் இரு அணி பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிக்க திணறி வந்தனர்.

Ashwin-3

- Advertisement -

இதில் பந்திற்கும் பேட்டிற்கும் கடுமையான போட்டி நிலவியது. அதுமட்டுமின்றி, இந்தியர் நீட்டான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான் அவர்களது பலம். இந்திய பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் பும்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் மிக்கிய காரணமாக இருக்கிறது. இளம் வீரர் முகமது சிராஜும் சிறப்பாக செயல்பட்டார்” என்று ஜஸ்டின் ஷங்கர் செயதியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.