சச்சினுக்கு அடுத்து தோனியை தான் இப்படி பார்க்கிறேன்.. லக்னோ அணியின் பயிற்சியாளர் – ஜஸ்டின் லாங்கர் ஆச்சரியம்

Langer
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய 42 வயதான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் சைலண்டாக ராஞ்சி நகருக்கு சென்றடைந்து விட்டார்.

அந்த வகையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது தோல்வியை சந்தித்த சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. சென்னை அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

அதற்கு அடுத்து சில நாட்களாக தோனி குறித்தே அதிக அளவு சமூகவலைத்தளத்தில் பேச்சுகள் இருந்து வருகின்றன. ஆனால் தோனியோ ஒருபுறம் அமைதியாக எந்த விடயத்தையும் கூறாமல் சொந்த ஊருக்கு சென்று தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தோனி குறித்து பேசியுள்ள லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் : இந்தியாவில் தோனியை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுகின்றனர். குறிப்பாக சி.எஸ்.கே லக்னோவுக்கு அணி வந்தபோது 50,000 இருக்கையில் கிட்டத்தட்ட 48,000 இருக்கைகளில் தோனியின் ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் அமர்ந்திருந்தனர்.

- Advertisement -

அதேபோன்று நாங்கள் சென்னை சென்றிருந்த போது அங்கிருந்த 100 சதவீத ரசிகர்கள் தோனியின் ஜெர்சியையே அணிந்து சி.எஸ்.கே அணியை ஆதரித்திருந்தார்கள். இந்தியாவில் இப்படி ஒரு நபரை ஹீரோ போல கொண்டாடப்படுவதை என்னால் நம்பவே முடியவில்லை.

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ இந்திய அணியுடன் பயணிக்காத விராட் கோலி.. பயிற்சி போட்டிக்கு சந்தேகம்.. காரணம் என்ன?

இதற்கு முன்னர் சச்சின் விளையாடும்போது ரசிகர்கள் அவருக்கு ஆரவாரம் செய்ததை பார்த்துள்ளேன். அதன் பிறகு தோனிக்கு தான் அந்த மரியாதை கிடைத்துள்ளது என ஜஸ்டின் லாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement