டி20 தொடரில் மட்டுமல்ல. முதல் டெஸ்ட் போட்டியிலும் இவர் விளையாடுவது சந்தேகம் – பயிற்சியாளர் அறிவிப்பு

indvsaus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு முறையாக துவங்கிய இத்தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டியும் தற்போது நடைபெற்று வருகிறது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி உள்ளது என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் ஒட்டுமொத்தமாக பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆஸ்திரேலிய அணி தற்போது உச்சத்தில் இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை சிறப்பான பந்து வீச்சாளர்களை வைத்திருந்தாலும் திறம்பட செயல்படவில்லை.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினாலும் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் பெரிய இலக்குகளை இந்திய அணியால் வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியவில்லை. மேலும் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 350 ரன்களுக்கு மேல் குவித்தது.

warner

இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தாலும் வெற்றியை எட்டக்கூடிய அளவிற்கு விளையாட முடியவில்லை. இதனால் மூன்றாவது போட்டியின் மீது எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது என்றாலும் இந்த போட்டியில் ஜெயித்து இந்திய அணி கௌரவத்துடன் தொடரை முடிக்க எதிர்பார்க்கும். இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே எதிர்பார்த்தபடி காயம் காரணமாக துவக்க வீரர் வார்னர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலகா மார்னஸ் லாபுசாக்னே துவக்க வீரராக களமிறங்குவார் என்று கேப்டன் பின்ச் தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள டி20 தொடரிலும் வார்னர் இடம்பெற மாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக டி20 அணியில் ஷார்ட் விளையாடுவார் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் வார்னர் விளையாடுவது சந்தேகம் தான் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார்.

Warner

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் அவரை சந்தித்த போது காயம் அதிகமாக காணப்பட்டது. மேலும் மருத்துவர்களிடம் விசாரித்த போது அவரது இடுப்புப் பகுதிக்குக் கீழ் இருக்கும் எலும்பு மற்றும் தசை இரண்டும் காயமடைந்து அதனால் இரண்டு வாரங்களுக்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இந்த தகவலின் படி அவர் முதல் டெஸ்ட் போட்டிகளில் திரும்புவது கடினம் என நினைக்கிறேன்.

ஏனெனில் முதல் போட்டியில் அவர் அணிக்கு திரும்பினாலும் ஐந்து நாட்கள் வரை நின்று டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் கடினம். எனவே அவர் மீண்டும் காயம் அடைய வாய்ப்பு இருப்பதால் முதல் போட்டியில் அவரை வெளியே அமரவைத்து மீத போட்டிகளில் விளையாட வைக்க ஆலோசனை செய்து வருவதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement