கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து 2 முக்கிய வீரர்கள் விலகல். புதிய வீரர்களுக்கு வாய்ப்பு – பயிற்சியாளர் அறிவிப்பு

indvsaus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நாளை தொடங்க இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கியுள்ளது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது யாதெனில் பந்து வீச்சுதான்.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இருவரும் விளையாட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு ஓய்வு அளித்து வேறு வீரர்கள் அந்த இடத்தில் விளையாடுவார்கள் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணியில் அடுத்த போட்டியின் போது இன்னும் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இடுப்புப்பகுதியில் காயமடைந்த துவக்க வீரர் டேவிட் வார்னர் தற்போது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். இருந்தாலும் அவர் காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுவர ஓய்வு அவசியம் என்பதாலும் கம்மின்ஸ் பணிச்சுமையை குறைக்க ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

warner 1

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் திட்டத்திற்கு வார்னர் மற்றும் கம்மின்ஸ் ஆகிய இருவரும் மிக முக்கியமானவர்கள். எனவே அவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் நடைபெறும் மிக முக்கியமான தொடராக இந்த டெஸ்ட் தொடர் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடரின் மூலம் கிடைக்கும் ரும் புள்ளிகள் உலகச் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பிற்கு உதவும்.

PatCummins

அதனால் அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடருக்கு முழுமையாக தயாராக வேண்டும் என்ற காரணத்தினாலும் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வார்னரின் காயம் குணமடைந்து திரும்ப டெஸ்ட் போட்டிக்கு தயாராக அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் மன ரீதியான ஓய்வும் வீரர்களுக்கு முக்கியம் என்பதால் கம்மின்ஸ்க்கு ஓய்வு அளித்து உள்ளோம் என லாங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement