இந்திய அணி பெற்ற வெற்றியினால் ஆஸ்திரேலிய அணிக்குள் ஏற்பட்டுள்ள பெரும் சண்டை – விவரம் இதோ

Langer
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர்.

pant

- Advertisement -

ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேயா அணியை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவுடன் தோல்வி அடைந்ததால் ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் மற்றும் மூத்த வீரர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆஸ்திரேலியா ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல் படி “ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கரின் நடவடிக்கை மூத்த வீரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா காரணமாக குரோன்டையனில் வீரர்கள் இருப்பதால் அவர்களது மனநிலை மாற்றம் அடைந்திருக்கிறது. இதனால் மூத்த வீரர்களும் மனதளவில் சோர்வாக இருக்கின்றனர்.

paine 2

ஜஸ்டின் லங்கர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அடிக்கடி தனது முடிவுகளில் மாற்றம் செய்தது பலருக்கு பிடிக்கவில்லை. காபாவில் நடைபெற்ற இறுதி டெஸ்டில் ஜஸ்டின் லங்கர் இடைவெளியின் போது தனது முடிவை மாற்றிக்கொண்டே இருந்தார். இது மூத்த வீரர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஜஸ்டின் லங்கரின் இந்த செயலால் தான் தொடரை இழந்ததாக மூத்த வீரர்கள் நினைக்கின்றனர்” என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

INDvsAUS

ஏற்கனவே டெஸ்ட் அணியில் கேப்டன் பதவியில் இருந்து டிம் பெயினை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறொரு கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement