இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் நேற்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 51 ரன்களையும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தும் அசத்தினர். மொத்தத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் பின்ச் மற்றும் ஷார்ட் ஆகியோர் முறையே 35, 34 ரன்கள் அடித்தன.ர் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோன்று ஜடேஜாவுக்கு பதிலாக பந்துவீசிய சாஹல் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி20 தொடரில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது கடைசி ஓவரில் ஸ்டார்க் பந்துவீச்சில் தலையில் அடி வாங்கிய ஜடேஜா அதன் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கன்கஷன் விதிமுறைப்படி சாஹல் அவருக்கு பதிலாக களமிறங்குகிறார் என்ற தகவல் முதல் பாதி முடிந்ததும் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் இறங்குவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக இடைவெளி அறிவிக்கப்பட்டது.
அதனால் ஆத்திரம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் ஆகியோர் அந்த இடைவேளை நேரத்தில் ஐசிசி நிர்வாகியிடம் இந்த விடயம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜடேஜாவுக்கு பதிலாக எவ்வாறு சாஹலை களமிறக்கலாம் என்பது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும் ஜடேவாவிற்கு ஏற்பட்ட மூளை அதிர்வு காரணமாக அவர் விளையாடவில்லை அவருக்கு பதிலாக சாஹல் இறங்குகிறார் என்று ஐசிசி நிர்வாகியும் அவர்களிடம் தெளிவுபடுத்தினார்.
“It’s white and gold”
“No, Black and blue.”
— Jarrod Kimber (@ajarrodkimber) December 4, 2020
இருப்பினும் இந்த விஷயத்தில் அந்த நிர்வாகியின் தகவலை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லாங்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மைதானத்திலேயே அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது விரக்தியையும் வெளிப்படுத்தினார். இந்த விடயம் தற்போது இணையத்தில் வீடியோ வடிவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.