ஐ.பி.எல் வரப்போகுது. சாதிக்கனுன்னு நெனச்சா இதை பண்ணுங்க – ஜஸ்டின் லாங்கர் அட்வைஸ்

Langer

அந்த காலகட்டத்தை போல் அல்லாமல் இப்போது இருக்கும் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளத்தில் அதிக தொடர்பில் இருக்கின்றனர். அப்போதெல்லாம் செய்தித்தாளில் வருவதை மட்டும் தான் தெரியும். மேலும் ,தொலைபேசியில் யாராவது தொடர்பு கொண்டு பேசினால் மட்டுமே செய்தி தெரியவரும். ஆனால் தற்போதைய நவீன உலகில் கையில் கைபேசி இருக்கிறது, சமூக வலைத்தளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் என பல இருக்கிறது.

ipl-bowlers

அதனை தொடர்ந்து உலகில் எந்த மூலையில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இப்படி தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இது பலருக்கு நன்மை பயத்தாலும் மக்களுக்கு அதிகம் தெரியும் பிரபலங்களுக்கு பிரச்சனையாக தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் இளம் வீரர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இதனை இளம் வீரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : சமூக வலைதளங்கள் மூலம் இளம் வீரர்களுக்கு அதிக அளவில் கவனம் சிதற வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஆட்டத்தின் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது.

langer

எனவே அவர்கள் அதில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். நம்மீது அக்கறை உடைய நம் வளர்ச்சி மீது பொறாமை இல்லாமல் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மட்டுமே பெறவேண்டும். சமூக வலைதளங்களில் யாருடனும் பேசக்கூடாது. பலருடன் உரையாடுவதன் அவர்கள் பல கருத்துகளை தெரிவிப்பார்கள் இதை நமக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.

- Advertisement -

ipl

குறிப்பாக சமூக வலைதளங்களில் மன உளைச்சலை உருவாக்கம் பேச்சுக்கள்தான் அதிகம் இருக்கிறது. நினைத்தவற்றை எல்லாம் பேசுகிறார்கள். இதில் நியாயம் இல்லை. ஐ.பி.எல் போன்ற தொடர்கள் வரவிருப்பதனால் இளம் வீரர்கள் சமூக வலைத்தளத்தில் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.