- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தியா இலங்கை போட்டியின் இடையே மைதானத்தை சுற்றிவந்த விமானம் – விவரம் இதோ

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வெற்றிபெற்றாலும் சரி, தோற்றாலும் சரி இந்திய அணி அரையிறுதி போட்டியில் விளையாடுவது உறுதி. ஆனால் இலங்கையை இந்திய அணி வீழ்த்தினால் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா இலங்கை ஆகிய அணிகள் விளையாடும் இந்த போட்டியின் இடையே வானில் பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டி துவங்கிய சில ஓவர்களிலேயே காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற வாசகம் பதிக்கப்பட்ட விமானம் மேலே வானில் பறந்தது. காஷ்மீர் போராளிகள் மற்றும் ஆதரவற்ற இந்த விமானத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விமானம் மைதானத்தில் பல முறை சுற்றி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நிறுத்தப் படவில்லை என்றாலும் மைதானத்தில் அமர்ந்து ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இதனால் பீதி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரசிகர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by