விராட் கோலியெல்லாம் என் முன்னாடி ஒன்னுமே இல்ல. கொக்கரித்த பாக் வீரர் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Junaid-1
- Advertisement -

பாகிஸ்தான் வீரர்களுக்கு எப்படியாவது இந்திய வீரர்களை விமர்சித்துப் பேசிய பிரபலமாகி விட வேண்டும் இதுதான் அவர்களது பலகால வாடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் கூட சோயப் அக்தர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரை மறைமுக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு இருந்தார் என்பதை பார்த்துக் கொண்டிருந்தோம்.

Pak

- Advertisement -

தற்போது அந்த அணியின் மற்ற வீரர்களும் இதனை செய்யத் துவங்கிவிட்டனர். முன்னதாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரை பாகிஸ்தான் அணி 2 – 1 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது .

இதில் மிகச் சிறந்த வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மூன்று போட்டிகளிலும் சேர்த்து 13 ரன்கள் மட்டுமே எடுத்தார் . இதில் பிரச்சனை என்னவென்றால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான், விராட் கோலியை மூன்று போட்டிகளிலுமே விக்கெட் வீழ்த்தினார்.

Junaid

இதனை வைத்து எட்டு வருடங்கள் கழித்து தற்போது பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார் ஜுனைத். அவர் கூறுகையில்…

- Advertisement -

முதன் முதலாக நான் விராட் கோலியை 2012 ஆம் ஆண்டு பார்த்தேன் . அவர் ஒரு ஸ்பெஷலான பேட்ஸ்மென் என்று நினைத்தேன். அவருக்கு முதன்முதலாக அகலப்பந்து வீசினேன். அதற்கு அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்தினேன். இவ்வாறு மூன்று போட்டிகளிலும் அவரது விக்கெட்டை நான்தான் வீழ்த்தினேன்.

Kohli

அதன் பின்னர் தான் தெரிந்தது அவர் மிகப்பெரிய பேட்ஸ்மேன் எல்லாம் கிடையாது அவரும் சாதாரண வீரர் தான் என்று. அப்போதிலிருந்து விராட் கோலியை நாம் எளிதில் விக்கெட் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என தேவையில்லாமல் விமர்சித்து பேசிக்கொண்டிருக்கிறார் ஜூனைட் கான். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்களிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Advertisement