374லாம் ஈஸி சேசிங்.. இந்தியாவை தோற்கடிச்சு அந்த மேட்ச்சோட ரிப்ளேயை காட்டுவோம்.. ஜோஸ் எச்சரிக்கை

Josh Tounge
- Advertisement -

லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூலை 31ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் அடித்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் குவித்து 23 ரன்களை முன்னிலையாகப் பெற்றது.

அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்து 396 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 118, ஆகாஷ் தீப் 66, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்கள் எடுத்தனர். இறுதியாக 374 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 50/1 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

ஈஸியா சேசிங் செய்வோம்:

வரலாற்றில் 2022 பர்மிங்காம் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 378 ரன்களை துரத்தியதே இங்கிலாந்தின் வெற்றிகரமான அதிகபட்ச சேசிங்காகும். அதற்கடுத்ததாக இத்தொடரின் முதல் போட்டியில் லீட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 371 ரன்களை சேசிங் செய்து இங்கிலாந்து வென்றது. ஆனால் இந்தப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் வரலாற்றில் எந்த அணியும் 270+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை.

ஆனால் தங்களுக்கு 374 என்பது எளிதான இலக்கு என்பதால் மீண்டும் அதை சேசிங் செய்து வெல்வோம் என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் டாங் தெரிவித்துள்ளார். குறிப்பாக லீட்ஸ் மைதானத்தில் முதல் போட்டியில் வெளிப்படுத்திய சேசிங்கை இப்போட்டியில் மீண்டும் விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சேசிங் ரிப்ளே:

“இது லீட்ஸ் போட்டியின் ரிப்ளேயாக இருக்கும். அந்த ரன்களை மீண்டும் அடித்தால் இது எங்களுக்கு கிரிக்கெட்டின் சிறந்த நாளாக அமையும். பேட்டிங் துறையில் நாங்கள் நேர்மறையாக விளையாடுவதால் உற்சாகத்துடன் இருக்கிறோம். எங்களிடம் இருக்கும் பேட்டிங் பலத்திற்கு ஏன் களத்திற்கு சென்று இலக்கை தொடுவதற்கான செயல்பாடுகளை கொடுக்க முடியாது?”

இதையும் படிங்க: 8 வருடம் 9 தோல்வி.. ப்ராவோவை முந்தி ஹோல்டர் வரலாற்று சாதனை.. பாகிஸ்தானுக்கு எதிராக போராடி வெ.இ வெற்றி

“தற்சமயத்தில் நாங்கள் அதிகப்படியாக சிந்திக்காமல் குளிர்ச்சியாக இருக்கிறோம். அதனால் 374 ரன்களை எங்களால் சேசிங் செய்ய முடியாமல் போவதை நான் பார்க்கப் போவதில்லை” என்று கூறினார். மேலும் பந்து வீச்சில் தங்களுடைய செயல்பாடுகள் மேடு பள்ளங்களாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதையும் தாண்டி இப்போட்டியில் வெற்றி பெறும் அளவுக்கு இங்கிலாந்து நல்ல சூழ்நிலையில் இருப்பதாக அவர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement