கோலியை விட இவர் ரொம்ப டேஞ்சர். இவரை இந்தமுறை ரன் அடிக்க விடமாட்டோம் – ஹேசில்வுட் ஓபன் டாக்

hazlewood 2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது 17 ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. 17ஆம் தேதி துவங்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் பகலிரவு போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதைய துவங்கியுள்ள நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

INDvsAUS

- Advertisement -

அந்த வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஹேசில்வுட் இந்திய அணி குறித்தும் இந்த டெஸ்ட் தொடர் குறித்தும் பல சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பல நேரங்களில் பவுன்சர் பந்து தந்திரமான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் வீழ்ந்த பயன்படுகின்றன, இது விளையாட்டின் ஒரு பகுதி ஆகும்.

மற்ற நாடுகளைவிட ஆஸ்திரேலியாவில் பவுன்சர் அதிகம் வீசப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியா அணி பவுலர்களும் அதிகபட்ச பவுன்சர்களை பயன்படுத்தும் வழக்கமுடையவர்கள். டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது சாதாரணமான விடயம் கிடையாது. அப்படி விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை என்றால் பவுன்சர் பந்துகளை பயன்படுத்தி லெக் சைடில் பீல்டர்களை நிறுத்தினால் சீக்கிரம் விக்கெட் கிடைக்கும்.

Pujara 1

இரண்டு அணிகளுமே இதனை முயற்சிக்கும் என்று கூறினார். மேலும் கடந்த முறை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த புஜாராவை இந்த முறையும் ரன் அடிக்க விடமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : புஜாரா கடந்த தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர். இதனால் எங்களுக்கு சரியான ஓய்வு கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொள்வது சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகு அந்த வகையில் புஜாரா மிகச் சிறப்பாக ஆடி வருகிறார்.

Pujara-2

கடந்தகால தவறுகளை எங்களுக்கு நல்ல பாடமாக எடுத்துக்கொண்டு இந்த முறை அந்த தவறை செய்யமாட்டோம். புஜாராவை ரன் அடிக்க விடமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்டார்க் அணிக்கு திரும்பி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஏனெனில் அவர் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு முக்கியம் என்றும் பகலிரவு போட்டிகளில் எவ்வளவு முக்கியம் என்றும் நாம் அனைவரும் அறிந்ததே. எனவே நிச்சயம் அவரும் இந்த டெஸ்ட் தொடரில் விக்கெட் வேட்டையை தொடர்வார் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement