எனக்கு உயிர் தான் முக்கியம், பாகிஸ்தானுக்கு போக வாய்ப்பு குறைவு – அச்சத்தில் ஆஸி வீரர்

Maxwell
- Advertisement -

வரும் மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 3ஆம் தேதி கராச்சி நகரில் துவங்க உள்ளது.

aus vs pak

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் இந்த சுற்றுப் பயணம் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடைசியாக பாகிஸ்தான் மண்ணில் அந்த அணி கடந்த 1998ஆம் ஆண்டு மார்க் டய்லர் தலைமையில் ஒரு கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அதன்பின் தற்போதுதான் 24 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

சர்ச்சையான பாகிஸ்தான்:
கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய இலங்கை அணி மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் காரணமாக அந்த நாட்டிற்கு செல்வதை பல கிரிக்கெட் அணிகளும் தவிர்த்து வந்தன. இருப்பினும் அதன் பின் பல வருடங்களாக போராடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு அம்சங்களை உயர்த்தி ஜிம்பாப்வே, இலங்கை போன்ற சிறிய நாடுகளை தங்கள் நாட்டிற்கு வரவழைத்து கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

Pak

அந்த வேளையில் கடந்த 2021ஆம் ஆண்டு இதேபோல பல வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி அங்கு அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருந்தது. அந்த சுற்றுபயணத்தின் முதல் போட்டி துவங்கும் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து அணிக்கு தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி அந்த சுற்றுப்பயணத்தை திடீரென ரத்து செய்த நியூசிலாந்து அவசர அவசரமாக நாடு திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் நியூசிலாந்தின் அந்த முடிவை காரணம் காட்டி அடுத்த சில வாரங்களில் தங்கள் அணி பங்கேற்க இருந்த கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து ரத்து செய்தது.

- Advertisement -

உயிர் முக்கியம்:
பாகிஸ்தானில் நிலவும் இந்த பதட்டமான சூழ்நிலைகளால் அந்நாட்டுக்கு செல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தயங்குவதாக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற “தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்” பத்திரிகையில் செய்திகள் வெளியாகின. அதற்கு தகுந்தார்போல் கடந்த வாரம் பாகிஸ்தானில் ஒரு சில தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்தது ஆஸ்திரேலிய வீரர்களை மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது.

hazelwood 1

இந்நிலையில் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் ஒருசில ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் விலகினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் இது பற்றி பல விதமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே அங்கு செல்வதற்கான நம்பிக்கைகள் அதிகமாக உள்ளது என்றாலும் ஒரு சில விஷயங்களில் ஒருசில ஆஸ்திரேலிய வீரர்கள் தயக்கத்துடன் உள்ளார்கள். அதில் ஒரு சில வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அது நியாயமான ஒன்றும்கூட, ஏனெனில் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இது பற்றி விவாதித்து ஒரு முடிவுடன் வந்துள்ளதால் அதை மதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறுமா:
ஆஸ்திரேலியாவின் இந்த சுற்றுப்பயணத்தின் முதலில் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆனால் அந்த மைதானத்தில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென தீ பற்றி எரிந்தது சமூக வலைதளங்ககளில் வைரலானது. மைதானத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின்கசிவு தான் அதற்கு காரணம் என அது பற்றி தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அதை சரி செய்து அதே மைதானத்தில் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது.

australia

அத்துடன் பாகிஸ்தானுக்கு அருகிலுள்ள ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடத்தி வரும் செய்தியும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாமா என ஆஸ்திரேலிய வீரர்களை யோசிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஒரு சில ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இது பற்றி விவாதித்து அங்கு செல்ல வேண்டாம் என முடிவு எடுத்துள்ளதாக ஜோஷ் ஹேசல்வுட் கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முழுமையான முடிவோடு இருப்பதாக தெரியவருகிறது. ஒருவேளை இந்த தொடர் திட்டமிட்டபடி நடந்தாலும் கூட ஒரு சில முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இதிலிருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement