- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாங்க போட்ட எல்லா திட்டத்தையும் நொறுக்கிய அவர் நல்ல பிளேயர்.. ஜெய்க்கிறது கஷ்டம்.. ஹேசல்வுட் பாராட்டு

பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நெருங்கியுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் அபார பந்து வீச்சில் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 487-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

ஹேசல்வுட் பாராட்டு:

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100*, கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நேதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 534 ரன்கள் துரத்தும் ஆஸ்திரேலியா நான்காவது நாள் முடிவில் 12-3 என தடுமாறி வருகிறது. தற்சமயத்தில் இந்திய அணி 522 ரன்கள் முன்னிலையுடன் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அறிமுகப் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அவருடைய ஆட்டம் பற்றி ஆஸ்திரேலிய பவுலர் ஹேசல்வுட் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அசத்தல்:

“மிகவும் நன்றாக பேட்டிங் செய்த அவர் நல்ல பிளேயர். அவருக்கு எதிராக நாங்கள் நிறைய திட்டங்களை முயற்சித்தோம். ஆனால் அனைத்தையும் நகர்த்தி அசத்திய அவருக்கு பாராட்டுக்கள். இந்தியா இரண்டு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தது. அவர்களுக்கு எதிராக அங்கே பந்து வீசுவது கடினமான வேலையாக இருந்தது. அந்த நேரத்தை நீங்கள் கடந்து விட்டால் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும்”

இதையும் படிங்க: சதத்தை விட நாட்டுக்காக விளையாடுவதே பெருமை.. இதுக்கு அவர் தான் முக்கிய காரணம்.. விராட் கோலி பேட்டி

“நாள் முடிவில் ஆடுகளத்தில் சிறிது சிறிதாக பவுன்ஸ் ஏறி இறங்குவதை பார்க்கிறோம். அது பேட்ஸ்மேன்கள் பார்க்கும் விஷயமாக இருக்கும்” என்று கூறினார். மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெல்வது கடினம் என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் தங்களுடைய பேட்ஸ்மேன்கள் 80 – 90 ரன்கள் குவித்து பார்முக்கு திரும்பி வெற்றிக்காக இப்போதும் போராட முயற்சிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -