இந்திய அணி இனிமேல் கவலைப்பட வேண்டாம்.. கடைசி 3 மேட்ச்ல ஆடமாட்டேன்.. காரணத்தை சொன்ன ஹேசல்வுட்

Josh Hazelwood
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2வது போட்டியில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரில் முன்னிலை பெற்றது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியாவை 125க்கு சுருட்டிய ஆஸ்திரேலியா எளிதாக வென்றது.

அந்த வெற்றிக்கு ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் மிகவும் தரமான பவுலராக அறியப்படும் சரியான லைன், லென்த் ஆகியவற்றை பிடித்து துல்லியமாக பந்து வீசக்கூடியவர். கடந்த பல வருடங்களில் ஆஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

இந்தியாவுக்கு கவலையில்லை:

அப்படிப்பட்ட அவர் 2வது போட்டியில் பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே இந்தியாவை சரித்தார். அதிலிருந்து மீள முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்ததாக கேப்டன் சூரியகுமார் போட்டியில் முடிவில் அவரை பாராட்டினார். அந்தளவுக்கு தரமான ஹேசல்வுட் அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆசஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளார்.

அத்தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக சிட்னிக்கு சென்று பயிற்சிகளை எடுக்க உள்ளதாக ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். அதனால் கடைசி 3 டி20 போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் தம்மைப் பற்றிய கவலையில்லாமல் விளையாடலாம் என்று அவர் தெரிவிக்கும் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எந்த ஃபார்மெட்டில் விளையாடினாலும் தற்சமயத்தில் எனக்குப் பந்து நன்றாக வருவதாக உணர்கிறேன். எனவே மெல்போர்ன் போன்ற மைதானத்தில் எதையும் அதிகமாக மாற்ற வேண்டியதில்லை”

- Advertisement -

ஹேசல்வுட் அறிவிப்பு:

“அங்குள்ள பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதுமான ஆதரவைக் கொடுக்கும். அங்கே அதிகமாக முயற்சிக்காமல் சரியான இடத்தில் பந்தைப் போட்டால் போதும். வெவ்வேறு இடங்களில் விளையாடும் போது அங்கேயும் இங்கேயும் சிறிய மாற்றங்களை செய்தால் அனைத்தும் முன்னேறும். நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் விளையாடியது எனக்கு உதவுவதாக நினைக்கிறேன்”

இதையும் படிங்க: இந்திய அணி மகளிர் உ.கோ ஜெய்ச்சா.. ஜெமிமாவுடன் சேர்ந்து நான் பாடுவேன்.. கவாஸ்கர் மகிழ்ச்சி அறிவிப்பு

“எப்போதும் நான் ஒரு தொடரில் கவனத்துடன் விளையாடுகிறேன். தேவைப்படும் போது ஓய்வெடுக்கிறேன். நாளை வீட்டுக்குச் சென்று ஷீல்ட் தொடரில் விக்டோரியாவுக்கு எதிராக சிட்னியில் விளையாட உள்ளேன். பின்னர் பெர்த்தில் முதல் ஆசஸ் போட்டிக்கு செல்வேன். அங்கு செல்வதற்கு முன் சிவப்பு நிற பந்தில் தொடர்ச்சியாக ஓர்களை போட்டு அதிக நேரத்தை செலவிட்டு ஃபார்மை பிடிப்பது முக்கியம்” என்று கூறினார்.

Advertisement