இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தது. இந்த தொடரில் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகமாக நடைபெற்று முடிந்தது.
அவர் விளையாடியது மிகச்சிறப்பான இன்னிங்ஸ் :
இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதால் 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அதேவேளையில் இந்திய அணிக்கு சவால் கொடுப்போம் என்று கூறி இங்கு வந்த இங்கிலாந்து அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது அந்த அணியின் வீரர்களுக்கு இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு தங்களது செயல்பாடு குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் :
உண்மையிலேயே இந்த தொடரில் தோல்வி அடைந்தது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் ஒரு சில விடயங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன். மேலும் முன்னேற்ற வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசித்து அதனை மாற்றிக் கொள்வோம். இந்தியா உண்மையிலேயே ஒரு அற்புதமான அணி.
அதிலும் குறிப்பாக அவர்களது சொந்த மண்ணில் அவர்கள் விளையாடுவதால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்களான பிரைடன் கார்ஸ், மார்க் வுட் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர். அதேபோன்று அபிஷேக்சர்மா விளையாடிய விதம் உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதையும் படிங்க : இதுதான் எங்களோட ஸ்டைல்.. இனிமேல் இப்படித்தான் ஆடுவோம்.. வெற்றிக்கு பின்னர் – சூரியகுமார் யாதவ்
நான் இதுவரை எவ்வளவோ கிரிக்கெட்டை பார்த்திருக்கிறேன் ஆனால் இது போன்ற ஒரு அற்புதமான பேட்டிங்கை இன்று தான் பார்த்தேன். இந்த டி20 போட்டிக்கு பிறகு அடுத்ததாக நாங்கள் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறோம். அந்த அணியில் ரூட் எங்களது அணியின் முக்கிய வீரராக அணிக்கு திரும்ப இருப்பது மகிழ்ச்சி. டி20 தொடரில் விட்டதை ஒருநாள் போட்டியில் கைப்பற்ற முயற்சிப்போம் என பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.



