இவ்வளவு பெரிய இலக்கையும் எளிதாக சேசிங் செய்து வெற்றிபெற இதுவே காரணம் – பட்லர் பேட்டி

Buttler
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்களான ராகுல், ரிஷப் பண்ட், கோலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்களை குவித்தது. ராகுல் 108 ரன்களும், பண்ட் 77 ரன்கள் மற்றும் கோலி 66 ரன்கள் என பேட்டிங்கில் அசத்தினார்கள்.

Rahul

- Advertisement -

பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரரான பேர்ஸ்டோ 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 99 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ரன்குவிப்பை வழங்கியதால் இரண்டாவது இன்னிங்சில் நிச்சயம் அவர்களை சுருட்டை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து வீரர்களின் அதிரடியான பேட்டிங் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. மேலும் இந்த தொடரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது வீரர்களின் ஆட்டத்தை பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை கட்டுக்குள் வைத்தனர்.

மிடில் ஓவர்களில் ரிஷப் பண்ட்டை அவுட் ஆக்கியது எங்கள் அணிக்கு பெரிய விக்கெட்டாக இருந்தது. மேலும் பேட்டிங்கின் போது துவக்க வீரர்கள் மீண்டும் ஒருமுறை அற்புதமான துவக்கத்தை அளித்தனர். அவர்களே எங்களது அணியில் பலமாக இருக்கின்றனர். பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரது பார்ப்பதற்கு அழகாக இருந்தது மட்டுமின்றி இவ்வளவு பெரிய இலக்கை சேசிங் செய்ய வழிவகுத்தது.

bairstow

பேர்ஸ்டோ இந்த போட்டியில் அடித்த சதம் அபாரமானது. ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் விளையாடிய விதம் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. கடந்த போட்டியில் நாங்கள் அதிரடியாக துவங்கியும் வெற்றி பெற முடியவில்லை அந்த வகையில் இந்த போட்டியில் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது சிறப்பான ஒன்று என பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement