ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னர் கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர் – காரணம் என்ன?

Buttler
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய 15-ஆவது ஐபிஎல் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொண்டு 74 ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டங்களில் முடிவில் இறுதி ஆட்டத்தில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

RRvsGT-1

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 130 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய குஜராத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்கள் விளாசி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அறிமுகமான முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று குஜராத் அணி சாதனை வெற்றி படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக ராஜஸ்தான் அணி வீரர்களிடம் பிரத்தியேக பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது. அந்த பேட்டியில் இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னர் இந்த இறுதிப் போட்டி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதில் ஷேன் வார்னே குறித்து பேச ஆரம்பித்த அவர் கண்ணீர் விட்டு தேம்பி அழுது சில வார்த்தைகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Warne and Watson IPL 2008 RR

ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வார்னே சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன்பின் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் அணி முன்னேறியுள்ளது. அதனால் இதுபோன்ற தருணங்களில் ஷேன் வார்னே இல்லையே என பட்லர் கண்கலங்கினார்.

- Advertisement -

இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில், ”ஷேன் வார்னே எங்களை பார்த்துக் கொண்டிருப்பார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் செல்வாக்கு மிக்கவர். முதல் சீசனில் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றவர். நாங்கள் அவரை தவறவிடுகிறோம். இந்த நேரத்தில் அவர் எங்களுடன் இல்லை என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க : பைனலில் கடைசி நேரத்தில் உம்ரான் மாலிக்க்கு டாட்டா காட்டிய நியூசி வீரர் – மின்னல்வேக பந்தை வீசி மாஸ் சாதனை

அதேபோன்று இந்த ஆண்டு ராஜஸ்தான் அணி குறித்து பேசிய சஞ்சு சாம்சன் : இந்தாண்டு எங்களது அணி தோற்றாலும் எங்களது செயல்பாடு அனைவரும் பெருமை அடையும் வண்ணமே இருக்கிறது. இறுதிப்போட்டியான இன்று ஒருநாளை தவிர்த்து எங்களுகடைய மற்ற ஆட்டங்கள் சிறப்பாகவே இருந்தன என்று தெரிவித்திருந்தார்.

Advertisement