இக்கட்டான சூழ்நிலையில் தோனியை போன்றே இவர் விளையாடினார் – இளம்வீரரை புகழ்ந்த ஜாஸ் பட்லர்

Buttler
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தவான், பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 329 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

curran 1

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது வெற்றிக்கு மேலும் 130 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான சாம் கரன் நிதானமாக ஆட ஆரம்பித்து கடைசி சமயத்தில் அதிரடியாக விளையாடி 83 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரி என 95 ரன்கள் அடித்து அசத்தினார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இலக்கினை எளிதாக துரத்தியது மட்டுமின்றி, இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விடுமோ என்று யோசிக்கும் அளவிற்கு சந்தேகத்தையும் சாம் கரன் ஏற்படுத்தினார். இந்நிலையில் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நடராஜன் அற்புதமாக வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன் காரணமாக 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது இந்த போட்டி முடிந்து சாம் கரன் அடித்த 95 ரன்கள் கொண்ட அந்த அற்புதமான இன்னிங்சை அனைவரும் பாராட்டினர்.

Curran 2

இந்நிலையில் சாம் கரண் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் அவரை தோனியுடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : இந்த போட்டி முடிந்து தோனியிடம் சாம் கரன் நிச்சயமாக இந்த போட்டி குறித்து பேசுவார் என நினைக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் தோனி என்ன செய்திருப்பாரோ அதையே இந்த போட்டியில் சாம் கரன் செய்ததை நான் பார்த்தேன். தோனி ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அவர் ஒரு சிறந்த பினிஷர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

Curran 1

அப்படி தோனியுடன் பழகிய சாம் கரன் அவரின் பக்குவத்தை அப்படியே இந்தப் போட்டியில் காண்பித்துள்ளார். தோனியுடன் அவர் சிஎஸ்கே அணியில் ஒரே டிரெஸ்ஸிங் ரூமில் பகிர்வதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல்லில் தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய அவர் தற்போது இங்கிலாந்து அளிக்கவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என புகழாரம் சூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement