
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் லீட்ஸ் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் வீழ்த்திய இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி லண்டன் லார்ட் மைதானத்தில் நடைபெறும் 3வது போட்டியில் வென்று முன்னிலை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு கேப்டன் சுப்மன் கில் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சாதாரண பேட்ஸ்மேனாக தடுமாறிய அவர் கேப்டனாக மாறியதும் 585* ரன்களை குவித்து பல சாதனைகளைப் புரிந்தார். குறிப்பாக 2வது போட்டியில் மட்டும் 430 ரன்களை அடித்த அவர் உலக சாதனைகளைப் படைத்து இந்தியாவை 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் சுப்மன் கில் பேட்டிங்கில் பெரிதாக எந்த பலவீனமும் இல்லை என்று முன்னாள் இங்கிலாந்து பவுலர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில்லை எந்த பந்துகளும் தொந்தரவு செய்யும் என்று நான் நினைக்கவில்லை. சில அதிர்ஷ்டமின்மையைத் தவிர்த்து அவர் எதையும் மோசமாக செய்யவில்லை”
“தம்முடைய கேரியரின் பெரும்பாலான நேரங்களில் துவக்க வீரராக விளையாடிய அவர் 30 என்ற கொண்டிருந்தார். ஆனால் விராட் கோலி ஓய்வுக்குப் பின் 4வது இடத்திற்கு நகர்ந்த அவர் சதம், பெரிய இரட்டை சதம், பெரிய 150 ரன்கள் குவித்தது அற்புதமானது. அவருடைய ஆட்டத்தைப் பார்க்கும் போது பெரிய வீக்னெஸ் இருப்பது போல் தெரியவில்லை” என்று கூறினார்.
இதற்கிடையே 3வது போட்டியில் 4 வருடங்கள் கழித்து ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். அவர் கடந்த ஐபிஎல் தொடர்களில் சுப்மன் கில்லை கிளீன் போல்ட்டாக்கியதாக ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். எனவே சுப்மனுக்கு எதிராக 3வது போட்டியில் ஆர்ச்சர் அதை மீண்டும் செய்யக்கூடும் என்று தெரிவிக்கும் பட்லர் இது பற்றி அதே நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: லார்ட்ஸில் அந்த 2 டேஞ்சரான இந்திய பவுலர்களே போதும்.. இங்கிலாந்தை நெனச்சா கவலையா இருக்கு.. ஸ்டுவர்ட் ப்ராட்
“சுப்மன் கில் விக்கெட்டை எடுப்பதற்கு திரும்பி வந்து போல்ட்டாக்கும் பந்துகள் இப்போதும் நல்ல ஆப்ஷன் என்று நினைக்கிறேன். லார்ட்ஸ் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்துக்காக மீண்டும் விளையாட வருகிறார். ஐபிஎல் தொடரில் அவர் பந்தை திருப்பி சுப்மன் கில் கதவுகளை உடைத்து போல்ட்டாக்கியதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அதைத் தவிர்த்து கில் சரியான வீரர். இந்தியா அவரைப் போன்ற டெக்னிக்கல் அளவில் சரியான வீரர்களை நிறைய உருவாக்கி வருகிறது” என்று கூறினார்.