8க்கு 7 தோல்வி.. எங்க வழி சரியா இருந்தும் அற்புதமான இந்திய அணியிடம் தோற்க இதான் காரணம்.. பட்லர் பேட்டி

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதிலும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ள இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் காண்பித்துள்ளது.

பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 357 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக துணை கேப்டன் கில் 112 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக அடில் ரசித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை 34.2 ஓவரில் 214க்கு சுருட்டிய இந்தியா சிறப்பான வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தியா 8க்கு 7 வெற்றி:

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக டாம் பாண்டன், கஸ் அட்கின்ஷன் தலா 38 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்நிலையில் இந்தச் சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் தங்களுடைய அணுகுமுறை சரியாக இருந்தும் அதை சரியாக செயல்படுத்தாததே தோல்விக்கு காரணம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில் 7 போட்டிகளில் தோற்றது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய பேட்டிங்கை பொறுத்த வரை இந்தச் சுற்றுப்பயணம் முழுவதுமே இதே மாதிரியாக சென்றது. நாங்கள் ஒரு அற்புதமான அணியால் தோற்கடிக்கப்பட்டோம். பேட்டிங்கில் எங்களுடைய அணுகுமுறை சரியான ஒன்றாகும்”

- Advertisement -

அற்புதமான இந்தியா:

“ஆனால் அதை எங்களால் களத்தில் செயல்படுத்த முடியவில்லை. இந்தியா முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடித்தனர். சுப்மன் மிகவும் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். எங்களுக்கும் நல்ல துவக்கம் கிடைத்தது. ஆனால் மீண்டும் அதை நாங்கள் சரியாக பயன்படுத்தாத கதையே நிகழ்ந்தது. எனவே நீண்ட நேரம் பேட்டிங் செய்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டும்”

இதையும் படிங்க:

“நாங்கள் இந்தச் சுற்றுப்பயணத்தில் வலுவான அணிக்கு எதிராக விளையாடினோம். அது தொடர்ந்து சவாலாகவே இருந்தது” என்று பாராட்டி பேசினார். முன்னதாக 3 – 0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலையில்லை சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு திறமை இருப்பதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறினார். அதே போல இங்கிலாந்துக்கு ஒயிட் வாஸ் தோல்வியை கொடுத்துள்ள இந்தியா அடுத்ததாக அவர்களை சாம்பியன்ஸ் டிராபியில் சந்திக்க தயாராக உள்ளது.

Advertisement