பட்லர் பேட்டின் கைப்பிடியில் ஆபாச வார்த்தை..! முகம் சுளித்த ரசிகர்கள்..! – புகைப்படம் உள்ளே

Advertisement

கிரிக்கெட் உலகில் பல்வேறு வீரர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் தனது பேட்டில் ஒரு ஆபாசமான வார்த்தையை எழுதி வைத்து சர்ச்சையில் சிக்கினார் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர். இதனால் பல்வேறு தரப்பினரிடமும் இருந்தும் ஜோஸ் பட்லருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது அந்த ஸ்லோகனை மாற்றம் செய்ய போவதாக பட்லர் தெரிவித்துள்ளார்.
buttler
கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையான 2 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் பயன்படுத்திய பேட்டின் கைப்பிடி பகுதியில் ஆங்கிலத்தில் ஒரு ஆபாச வார்த்தை ஒன்று எழுதப்பட்டிருந்தது பின்னர் கவனிக்கப்பட்டது. இதனை பார்த்த அனைத்து ரசிகர்களும், முன்னணி வீரராக இருக்கும் ஒருவர் இது போன்ற தகாத வார்த்தைகளை தன்னுடைய பேட்டில் பயன்படுத்தலாமா என்று முகம் சுழித்தனர்.

மேலும் சர்வதேச போட்டியில் விளையாடும் ஒரு வீரர், தான் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்களில் எந்த வித வாசகத்தையும் எழுத கூடாது என்பது ஐசிசி-யின் விதி. இதனால் ஜோஸ் பட்லருக்கு இந்த விவகாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், ‘பேட்டிங் செய்யும் போது இக்கட்டான சூழ்நிலையில் நான் இருக்கும் போது, அந்த பேட்டில் உள்ள வசனத்தை பார்க்கும் போது சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் தூண்டும். அதற்காக தான் அவ்வாறு அந்த பேட்டில் எழுதியுள்ளேன்’ என்று பட்லர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் தனது பேட்டில் உள்ள சர்ச்சையான ஸ்லோகனை மாற்றம் செய்ய போவது குறித்து பேசிய பட்லர் “எனக்கு ஐசிசி யிடம் இருந்து எந்த ஒரு எச்சரிக்கையும் வரவில்லை. ஒருவேளை நான் என் பேட்டில் உள்ள ஸ்லோகனை மாற்ற வேண்டும் என்றால் ” இட்ஸ் கம்மிங் ஹோம் ” என்று மாற்றம் செய்வேன் ” என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement