எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகிய ராஜஸ்தான் முக்கிய வீரர்- ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Buttler-3
- Advertisement -

கொரனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை, வருகிற செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் நிர்வாகம். இதற்காக அந்த நாட்டிற்கு சென்ற பிசிசிஐயின் தலைவரான சவுரவ் கங்குலி, ஐபிஎல் போட்டிகளை அந்நாட்டில் நடத்துவதற்கான அனுமதியை வாங்கியிருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல், போட்டிகளை நடத்துவதற்கான கட்டணங்கள் மற்றும் கொரனா பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை பற்றியும் அந்நாட்டு அரசாங்கத்திடம் கலந்தோசித்து வருகிறார்.

ipl trophy

இந்நிலையில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதைவிட எங்கள் நாட்டு அணிக்காக விளையாடுவதே முக்கியம் என்று கருத்து கூறி உள்ளார், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர். மீண்டும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டால் எங்கள் அணியின் வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று ஏற்கனவே அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான ஆஷ்லே கைல்ஸ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிவிட்டால், தங்களது தேச அணியில் விளையாட இடம் கிடைத்து விடும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், ஐபிஎல் மூலமாக அவர்கள் சம்பாதிக்கும் பணம், அவர்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் வழங்கும் சம்பளத்தை விட மிகமிக அதிகம் என்பதும் மற்றொரு காரணமாக இருக்கிறது. மற்ற வீரர்கள் அனைவரும் இப்படி ஒரு மன நிலையில் இருக்க என்னுடைய தேச அணிக்காக விளையாடுவதையே முக்கியமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர்.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கும் அவர், பொதுவாக ஆண்டு தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரால் எந்த ஒரு சர்வதேச போட்டியும் பாதிக்கப்படாது. ஆனால் அப்படி நடக்கும்போது நான் இங்கிலாந்துக்காக விளையாடுவதை தான் முதன்மையாக கருதுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஷாகிப் அல் ஹசன், லசித் மலிங்கா போன்ற வீரர்கள் பணத்திற்காக தங்களது தேச அணி பங்கேற்கும் சர்வதேச தொடரில் விளையாடமால் ஐபிஎல்லில் பங்கேற்றிருக்கின்றனர்.

buttler

அதிலும் லசித் மலிங்கா, ஐபிஎல்லில் பங்கு பெறுவதற்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்தே ஓய்வு பெற்றிருக்கிறார். இவர்களைப் போன்ற வீரர்கள் மத்தியில் தனது தேச அணிதான் முக்கியம் என்று கூறியிருக்கும் ஜாஸ் பட்லரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள். அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement