5 ஆவது டி20 போட்டி : நம்பமுடியாத வகையில் கேட்ச் பிடித்து சூரியகுமார் யாதவை வெளியேற்றிய இங்கி வீரர்

Jordan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தற்போது டாஸ் முடிந்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்துள்ளார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முடித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் மோதி வருகின்றன.

Thakur

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என 80 ரன்கள் குவித்தார். ஹார்டிக் பாண்டியா 17 பந்துகளில் 2 சிக்ஸர் 4 பவுண்டரி என 39 ரன்களை குவித்தனர். இதனையடுத்து தற்போது 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் 3 ஆவது வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரி என 32 ரன்களை குவித்து மீண்டும் ஒருமுறை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய போட்டியிலும் தான் சந்தித்த 2 ஆவது மற்றும் 3 ஆவது பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

Sky

தொடர்ந்து அசத்தலாக ஆடிய சூரியகுமார் யாதவ் ரஷித் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். அப்போது பந்து பவுண்டரி லைனில் சிக்சருக்கு அருகில் சென்ற போது நிச்சயம் பந்து சிக்சருக்கு செல்லும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அப்போது பவுண்டரி லைனில் ஓடி வந்த ஜோர்டான் அருமையாக பந்தினை பிடித்து உள்ளே தூக்கிப் போட முயன்றார். அதே நேரத்தில் இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான ராய் அருகில் இருக்கவே அந்த பந்து நேராக அவரது கைகளுக்கு சென்றது.

இதன் காரணமாக நம்ப முடியாத வகையில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் அந்த பந்தினை பிடித்த இங்கிலாந்து வீரர்கள் ராய் ஜோர்டான் பிடித்த அந்த கேட்ச்யை நம்ப முடியாமல் சிரித்தார். ஜோர்டான் பிடித்த இந்த அற்புதமான கேட்ச் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement