இதனை மட்டும் கேளுங்கள். நாளைக்கே உங்களால் எழுந்து பயிற்சிக்கு வரமுடியும். ரெய்னாவுக்கு ஐடியா கொடுத்த – ஜான்டி ரோட்ஸ்

Raina
- Advertisement -

இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னாவுக்கு கடந்த சில நாட்களாகவே இடது முழங்காலில் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மேலும் அந்த இடத்தில் அவர் முழு செயல்பாடு சரியில்லை என்று தெரியவந்ததால் அவர் தனது முழங்கால் பகுதிகளில் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய நெதர்லாந்து சென்றார்.

Raina

- Advertisement -

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து காயம் சரியாக 1 அல்லது 1.5 மாதங்கள் வரை ஆகும் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னாவின் காயம் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

Raina

நீங்கள் பல இளம் வீரர்களுக்கு ஒரு தூண்டுதலாக உள்ளீர்கள். உங்களது கிரிக்கெட் கரியரில் நீங்கள் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த பணியானது அபரிமிதமானது. கடந்த இரண்டு வருடங்களாக நீங்கள் சிறப்பாக போராடி வருகிறீர்கள். உங்களுடைய உடம்பை கேளுங்கள் அப்பொழுது உங்கள் மனம் சொல்லும் அப்படி உங்கள் மனது சொன்னால் நீங்கள் நாளையே பயிற்சிக்கு தயாராக இருந்து வருவீர்கள். எனவே மன திடத்தை சோதித்துப் பாருங்கள் என்று ஜாண்டி ரோட்ஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement