இந்தியரான என்னை பிசிசிஐ வேணாம்ன்னு சொல்லிட்டாங்க.. தோனி, கோலி மாற்றத்தை செஞ்சாங்க.. ஜான்டி ரோட்ஸ்

Jonty rhodes
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டார். அதே சமயம் ஃபீல்டிங் பயிற்சியாளரை தவிர்த்து அபிஷேக் நாயர், மோர்னே மோர்கெல், ரியான் டஸ்சேட் ஆகிய புதிய துணைப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த மூவரையுமே ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை வைத்து கௌதம் கம்பீர் தம்முடைய துணைப் பயிற்சியாளராக வேண்டும் என்று பிசிசிஐ’யிடம் கேட்டு வாங்கினார்.

அதே போல லக்னோ அணியில் கௌதம் கம்பீருடன் ஃபீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் செயல்பட்டார். எனவே அவரை கௌதம் கம்பீர் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபீல்டிங் துறைக்கு வெளிநாட்டவர் தேவையில்லை என்று கருதிய பிசிசிஐ அவரை கண்டுகொள்ளாமல் டி திலிப்பை மீண்டும் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

- Advertisement -

ஜான்டி ரோட்ஸ் ஆதங்கம்:

அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த ஃபீல்டரான அவரை பிசிசிஐ வேண்டாம் என்று சொன்னது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தம்முடைய மகளுக்கு இந்தியா என்று பெயரை வைத்து கோவாவில் குடியிருக்கும் தம்மை வெளிநாட்டவர் என்பதால் ஃபீல்டிங் பயிற்சியாளராக பிசிசிஐ வேண்டாமென சொன்னது ஏமாற்றத்தை கொடுத்ததாக ஜான்டி ரோட்ஸ் ஜாலியான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்திய அணியில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் ஃபீல்டிங் துறையில் மாற்றங்களை கொண்டு வந்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் ஜான்டி ரோட்ஸ் பேசியது பின்வருமாறு. “இதை உங்களால் நம்ப முடிகிறதா? அவர்கள் ஒரு சர்வதேச பயிற்சியாளரை விரும்பவில்லை. இத்தனைக்கும் நான் உள்ளூர் காரர் தான்”

- Advertisement -

விராட் கோலி, தோனியின் மாற்றங்கள்:

“அதாவது மெரா நாம் ஜாண்டி ரோட்ஸ். நான் கோவாவை சேர்ந்தவன். ஒருவேளை நான் கோவாவை சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். அதனால் நான் ஏதோ ஒரு மெட்ரோ நகரத்திற்கு குடிபெயர வேண்டும். இந்திய அணியின் கடந்த 2 ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். தோனி தலைமையில் நிறைய சீனியர்கள் இருந்தனர். அப்போது தோனி நிறைய உடல் திறனை காண்பித்தார்”

இதையும் படிங்க: விராட் கோலி பற்றி தெரியாததை சொன்ன கம்பீர்.. அதை அள்ளித்தரும் தங்கமான மனுஷன்.. பியூஸ் சாவ்லா

“தனது ஐபிஎல் கேரியரின் இறுதிப்பகுதியில் 40 வயதிலும் அவர் ஃபிட்னஸ் மற்றும் வலுவுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அதன் பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி ஃபிட்னஸை தேர்வில் ஒரு அங்கமாக மாற்றினார். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் ஃபிட்டாக இல்லையெனில் அசத்த முடியாது. அவற்றை சமமாக செய்ததாலேயே இந்தியா நல்ல ஃபீல்டிங் அணியாக வந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement