ஆப்கானிஸ்தான் இந்தளவுக்கு வளர.. இந்தியாவில் கிடைச்ச அந்த வாய்ப்பு தான் காரணம்.. ஜொனதன் ட்ராட் பேட்டி

Jonathan Trott
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் 3 லீக் போட்டிகளிலும் 3 வெற்றிகள் பெற்றது. குறிப்பாக காலம் காலமாக இந்தியாவுக்கே சவாலை கொடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிராக 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வென்றது.

அதனால் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாகவும் ஆப்கானிஸ்தான் உலக சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 20ஆம் தேதி வலுவான இந்தியாவை சந்திக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் உதவி:
இது போக 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 1992 சாம்பியன் பாகிஸ்தான் அணிகளையும் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி பிரமாதமாக இருக்கிறது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை விட தற்சமயத்தில் ஆப்கானிஸ்தான் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் தங்களுடைய வீரர்களுக்கு கிடைக்கும் அதிகப்படியான வாய்ப்புகள் தான் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு காரணம் என்று பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட் தெரிவித்துள்ளார். இது பற்றி வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு முந்தைய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து நேரங்களிலும் அழுத்தம் இருக்கக்கூடிய டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் போன்ற தொடரில் எங்களுடைய வீரர்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

“அது எங்களுக்கு நல்லதை செய்யும் மற்றும் முன்னோக்கி செல்ல எங்களுக்கு நன்றாக சேவை செய்யும் என்று நான் நினைக்கிறேன். எங்கள் வீரர்கள் நிறைய பேர் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு வரும் போது அவர்களிடம் சிறிய வித்தியாசம் ஏற்படுவதை பார்க்கிறேன்”

இதையும் படிங்க: 201 ரன்ஸ்.. வினோதமான உலக சாதனையை சமன் செய்த இலங்கை.. நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி

“வெற்றி என்பது நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டிய விஷயங்களை கண்டறிவதை பொறுத்ததாகும். எனவே எங்களுடைய வீரர்கள் வலைப்பயிற்சிகளை செய்து இந்தப் போட்டிக்கு தயாராகி கவனம் செலுத்துகின்றனர். எங்கள் வீரர்கள் தங்களுடைய நாட்டுக்காக விளையாடுவதில் பெருமையுடன் இருக்கிறார்கள் என்பதை அறிவேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய நேரப்படி நாளை காலை 6:00 மணிக்கு ஆப்கானிஸ்தான் விளையாட உள்ளது.

Advertisement