- Advertisement -
ஆசிய கோப்பை

என்னது வங்கதேசம் ஆசிய சாம்பியனா? இருங்க கூகுளில் பாத்துட்டு சொல்றேன்.. குழப்பிய ஆப்கானிஸ்தான் கோச் ட்ராட்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. அதில் ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை தோற்கடித்து அசத்தியது. மறுபுறம் ஹாங்காங்கிற்கு எதிராக வெற்றி பெற்ற வங்கதேச அணி இலங்கைக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

எனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் விளையாடுகிறது. அந்த சூழ்நிலையில் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஆசியக் கோப்பையை சில முறை வென்றுள்ள வங்கதேசம் தங்களுக்கு சவாலைக் கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

- Advertisement -

கூகுளில் பார்த்த பயிற்சியாளர்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் வங்கதேச அணி அழுத்தத்தில் இருப்பார்கள். ஆனால் வரலாற்றைப் பார்க்கும் போது அவர்கள் சில முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளார்கள்” என்று கூறினார். அதைக் கேட்ட செய்தியாளர்கள் ஆச்சரியத்தில் “நீங்கள் உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?” என்று அவரிடம் பதில் கேள்வி எழுப்பினார்கள்.

ஏனெனில் ஆசியக் கோப்பை வரலாற்றில் வங்கதேசம் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதிகபட்சமாக 2012, 2016, 2018 ஆகிய ஆசியக் கோப்பைகளில் ஃபைனல் வரை சென்ற வங்கதேச அணி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் (2 முறை) தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் ஆசிய அணிகளின் வரலாறு இங்கிலாந்து முன்னாள் வீரரான ட்ராட்டுக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

- Advertisement -

வங்கதேசம் – ஆப்கானிஸ்தான்:

அதனால் “இருங்கள் கூகுளில் பார்க்கிறேன்” என்று சொன்ன ட்ராட் உடனடியாக தம்முடைய மொபைலை எடுத்து ஆசியக் கோப்பை வரலாற்றைப் பார்த்தார். அதில் ஆசியக் கோப்பையை வங்கதேசம் வென்றதில்லை என்பதை தெரிந்து கொண்ட அவர் தொடர்ந்து பேசியது பின்வருமாறு. “உண்மையில் அவர்கள் சாம்பியன் பட்டம் வென்றிருப்பார்கள் என்று நான் நினைத்தேன்”

இதையும் படிங்க: மனசுல பெரிய அப்ரிடின்னு நினைப்போ.. இந்தியாவுக்கு எதிராக இப்படியா தோற்ப்பீங்க.. பாக் அணியை விளாசிய அப்ரிடி

“இருப்பினும் அவர்களுடைய அணியில் சில உண்மையான மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு அவர்கள் சிறந்த சவாலைக் கொடுப்பார்கள். எங்களுக்கு கிடைத்த இடைவெளி எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் அது முதல் போட்டியில் அதிகப்படியான வெப்பத்தில் விளையாடிய பின் உடல் மற்றும் மனதளவில் புத்துணர்ச்சி பெற உதவியது” என்று கூறினார்.

- Advertisement -