- Advertisement -
ஐ.பி.எல்

சசாங் ஸ்பெஷல் பிளேயர்.. சுனில் நரேனை பாத்து அதை தெரிஞ்சுக்கிட்டோம்.. ஆட்டநாயகன் பேர்ஸ்டோ பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற 42வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 261/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 71, ஃபில் சால்ட் 75 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 262 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு ப்ரப்சிம்ரன் சிங் சரவெடியாக விளையாடி 54 (20) ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். அடுத்ததாக வந்த ரிலீ ரோசவ் 26 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 8 பவுண்டரி 9 சிக்சருடன் 108* (47) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சாதனை நாயகன்:
அவருடன் சசாங் சிங் தம்முடைய பங்கிற்கு 2 பவுண்டரி 8 சிக்சருடன் 68* (28)ரன்கள் விளாசியதால் 18.4 ஓவரிலேயே 262/2 ரன்கள் எடுத்த பஞ்சாப் மாஸ் வெற்றி பெற்றது. அதனால் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக பஞ்சாப் உலக சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய ஜானி பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் சுனில் நரேன் போன்ற பகுதி நேர பேட்ஸ்மேன் அடிக்கும் அளவுக்கு பிட்ச் நன்றாக இருந்ததால் பவர்பிளேவில் நாமும் அடித்து நொறுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டதாக பேர்ஸ்டோ கூறியுள்ளார். அத்துடன் இந்த சீசனில் தொடர்ந்து அசத்தும் சசாங் சிங் ஸ்பெஷல் பிளேயர் என்றும் பாராட்டிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றது வெற்றிக்கான சாவியாகும். சுனில் நரேனின் அற்புதமான ஆட்டத்தால் கொல்கத்தா அணியும் அற்புதமான துவக்கத்தை பெற்றது”

- Advertisement -

“அதன் காரணமாக பவர் பிளேவில் நாங்கள் அடித்து நொறுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம். 200+ ரன்களை சேசிங் செய்யும் போது நீங்கள் பவர் பிளேவில் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும். சேசிங்கில் முடிந்தளவுக்கு அடித்து நொறுக்க வேண்டும். அப்போது சில நாட்கள் அதிர்ஷ்டம் உங்கள் வழியில் வரும். சில நாட்கள் உங்களுடையதாக அமையாது. எனவே பந்து நீங்கள் அடிக்கக்கூடிய இடத்தில் அதை அடிக்க செல்ல வேண்டும். சுனில் நரேன் கொல்கத்தாவுக்கு எந்தளவுக்கு முக்கிய வீரர் என்பதை நாங்கள் அறிவோம்”

இதையும் படிங்க: 262 ரன்ஸ் சேசிங்.. கொல்கத்தாவை சொந்த மண்ணில் ஓடவிட்ட பஞ்சாப்.. தெ.ஆ அணியை முந்தி மெகா உலக சாதனை வெற்றி

“எனவே அவருக்கு எதிராக நாங்கள் சில ஓவர்களில் அமைதியாக விளையாடினோம். சீசன் முழுவதும் அசத்தி வரும் சசாங் மிகவும் அன்பான ஸ்பெஷல் பிளேயர். முக்கிய நேரத்தில் வந்து அவர் அடித்து நொறுக்கியது நம்ப முடியாததாக அமைந்தது. மிகவும் இளமையாகவும் இல்லாத அவருடைய அறிவு, பொறுமை அபாரமானது. மிகவும் தெளிவாக அடித்த அவருக்கு பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -