- Advertisement -
இந்திய கிரிக்கெட்

12 ஸ்ட்ரைட் யார்கர்.. சச்சினே யார்ன்னு கேட்டாரு.. 2015இல் பும்ராவை அறிமுகப்படுத்தியது பற்றி ஜான் ரைட்

ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த ஆல் ஃபார்மட் பவுலர் என்று பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி எதிரணிகளை திணறடிக்கும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் முதல் போட்டியில் கேப்டனாக 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார். அதனால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி பும்ரா சாதனை படைத்துள்ளார். மேலும் அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக ஸ்மித், ஹெட் உள்ளிட்ட எதிரணி வீரர்களே பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

மும்பையில் பும்ரா:

முன்னதாக இந்தளவுக்கு ஜொலித்து வரும் பும்ரா முதல் முறையாக 2015 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். ஆரம்பத்தில் தடுமாறிய அவர் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவத்தால் முன்னேறி தற்போது அசத்தி வருகிறார். இந்நிலையில் மும்பை அணியில் பும்ராவை கண்டறிந்து அறிமுகப்படுத்தியது பற்றி அப்போதைய பயிற்சியாளர் மற்றும் முன்னாள் நியூசிலாந்து வீரர் ஜான் ரைட் நினைவு கூர்ந்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் அகமதாபாத் நகரில் இருந்தேன். அப்போது உள்ளூர் டி20 தொடரில் குஜராத் – மும்பை அணிகள் மோதியப் போட்டியில் பார்த்தோம். அப்போது ஒரு வித்தியாசமாக ஆக்சனை கொண்ட குழந்தை 12 தொடர்ச்சியான துல்லியமான யார்க்கர்களை வீசியது. அப்போது இதற்கு முன் இப்படி ஒரு பவுலிங்கை பார்த்ததில்லை என்று எனக்கு தோன்றியது”

- Advertisement -

சச்சினே கேட்டாரு:

“இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக இருந்ததால் பார்த்திவ் பட்டேல் எனக்கு தெரியும். அதனால் அவரிடம் சென்ற நான் யார் இந்த பையன் என்று கேட்டேன். அதற்கு பூம் என்று அவர் சொன்னார். அதனால் உடனடியாக அவரை நாங்கள் மும்பை அணிக்காக ஏலத்திற்கு செல்லாமலேயே விளையாட ஒப்பந்தம் செய்தோம். மிகவும் சிறந்த குழந்தையான அவர் அறிவானவர்”

இதையும் படிங்க: 533 ரன்ஸ் லீட்.. 50வது ஹாட்ரிக்.. அட்கின்ஷன் கலக்கல் சாதனை.. நியூஸிலாந்தை தெறிக்க விடும் இங்கிலாந்து

“பின்னர் முதல் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. அப்போட்டிக்கு முன் வலைப்பயிற்சியில் அவரை எதிர்கொண்டு முடித்த பின் என்னிடம் வந்த சச்சின் யார் இந்த பையன் என்று கேட்டார். அதற்கு பூம் என்று சச்சினிடம் சொன்னேன். ஆனால் அடுத்த 2 ஐபிஎல் தொடர்களில் பெரியளவில் விளையாடாத அவர் தடுமாறியதால் மக்கள் மறந்து விட்டார்கள். பின்னர் அவர் தன்னுடைய தடுமாற்றத்தில் வேலை செய்தார். அந்த பழைய கதையை தற்போது அனைவரும் மறந்திருப்பார்கள்” என்று கூறினார்.

- Advertisement -