கங்குலி கேப்டனாக இருந்த போது இவர்மீது அதிக நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்து வந்தார் – ஜான் ரைட் பேட்டி

Wright

கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டில் 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் கங்குலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். இன்று வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் என்றால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

அதே போன்று அப்போதைய தொடரும் சிறப்பாக அமைந்தது. இந்த தொடர் குறித்து தற்போது இந்திய அணியின் அன்றைய பயிற்சியாளர் ஜான் ரைட் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கங்குலியின் கேப்டன்சி குறித்து கூறுகையில் : திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பவர் கேப்டன் கங்குலி. அவரது தலைமையில் பல இளம்வீரர்களை உருவாக்கி அழகு பார்த்தார்.

அந்தவகையில் பாகிஸ்தான் தொடருக்கான தேர்வின்போது புதிய விக்கெட் கீப்பர் இடத்திற்கு தோனியை பரிந்துரை செய்தார். அப்போதுதான் நான் தோனியின் பெயரை முதல் கேள்விப்பட்டேன் பல்வேறு ஆலோசனைக்கு பின்னர் தோனியை அணியில் சேர்க்க முடியாமல் போனது. ஒரு நாள் தொடரில் ராகுல் டிராவிட், டெஸ்ட் தொடரில் பார்த்திவ் பட்டேல் ஆகியோர் கீப்பராக தேர்வு செய்தோம்.

Ganguly 1

தற்போதைய கிரிக்கெட்டில் தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவர். எனது பயிற்சியின் கீழ் அவர் விளையாடிய போது சொல்வது அனைத்தையும் கேட்டுக் கொண்டு அதை அப்படியே உள்வாங்கி அனைத்து நேரங்களிலும் அதை பயிற்சி செய்து விளையாடினார். அப்போதே நான் தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரராக வருவார் என்று கணித்தேன்.

- Advertisement -

அதேபோன்று தோனியை விடாமல் ஆதரவு கொடுத்துக் கொண்டே வந்தார் கங்குலி ஆனால் நாங்கள் பாகிஸ்தான் தொடருக்கான அணியில் அவரை சேர்க்கவில்லை என்றாலும் தோனியின் பெயரை தொடர்ந்து அணியில் வலியுறுத்திக் கொண்டே இருந்தார் கங்குலி. அதன்பிறகு கங்குலியின் முயற்சியால் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் டிசம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக தோனி இந்திய அணிக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் தோனி தொட்ட உயரங்கள் வேறு என்பது நாம் அறிந்ததே. கங்குலியின் தொடர் ஆதரவு அவருக்கு கிடைத்த போதே எனக்கு தெரியும் தோனி மிகப் பெரிய வீரராக வருவார் என்று அந்த அளவிற்கு தோன்யின் மீது நம்பிக்கை வைத்திருந்தார் கங்குலி என்றும் ஜான் ரைட் கூறியது குறிப்பிடத்தக்கது.