இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் பார்மேட்டில் கம்பேக் கொடுத்திருந்தார். அப்படி மீண்டும் அணிக்குள் வந்த அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது :
அடுத்த 2 போட்டிகளிலும் நான் விளையாட விரும்புகிறேன் : ஜோப்ரா ஆர்ச்சர்
முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இரண்டாவது இன்னிங்சின் போது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். இதன் காரணமாக எஞ்சியுள்ள இந்த தொடரிலும் அவர் முழுமையாக விளையாடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் அவரது முழங்கை காயம் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் என சில காரணங்களால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அணியின் நிர்வாகம் நினைக்கிறது. ஆனாலும் தான் இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என ஜோப்ரா ஆர்ச்சர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசய அவர் கூறுகையில் : நான் இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். ஏனெனில் இந்த தொடரை இழக்க நாங்கள் விரும்பவில்லை. தற்போது ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளோம். இனிவரும் இரண்டு போட்டிகளிலும் என்னுடைய திறமையை நிரூபித்து ஆஷஸ் தொடருக்கான விமானத்தில் ஏறுவேன் என நினைப்பதாக ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : பென் ஸ்டோக்ஸ் தலைமையின் கீழ் நான் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி. ஏற்கனவே கடந்த ஆண்டு 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிவிட்டேன். தற்போது மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி. என்னுடைய உடற்தகுதியிலும் நான் கவனத்துடன் இருக்கிறேன். நிச்சயம் மீண்டும் என்னுடைய பழைய வேகத்தை கொண்டு வந்து விக்கெட்டுகளை கைப்பற்ற விரும்புகிறேன் என ஆர்ச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஓய்வு பெற்றும் ஐசிசியின் ஆல் ஃபார்மட் கில்லியாக உலக சாதனை படைத்த கிங் கோலி.. விவரம் இதோ
இந்த ஆண்டு இறுதியில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்க உள்ளதால் அந்தத் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ள ஆர்ச்சர் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் அசத்துவதன் மூலம் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடிப்பார் என்று நம்பலாம்.



