ஐ.பி.எல் விளையாடும் போது நான் லீடர். ஆனால் இங்கிலாந்து அணியில் அப்படி இல்லை – ஆட்டநாயகன் ஆர்ச்சர்

Archer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே குவிக்க இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

eng

- Advertisement -

இந்த போட்டியில் துவக்கம் முதலே சிறப்பாக பந்து வீசிய ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 1 மெய்டன் ஓவர் வீசியது மட்டுமின்றி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக துவக்க வீரர் ராகுல், அதிரடி ஆட்டக்காரர் பாண்டியா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியின் சரிவுக்கு காரணமாக அமைந்த அவர் பந்துவீச்சில் அசத்தியதால் அவருக்கு நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ஜாப்ரா ஆர்ச்சர் கூறுகையில் : ஒரு அணிக்கு எதிராக தொடர் கடினமாக செல்லும் பொழுது நாமாக முன்வந்து சரியான போட்டியைத் அளிக்க வேண்டும். அந்த வகையில் நான் இன்றைய போட்டியில் எனது சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன்.

archer 1

ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை எங்கள் அணியின் பவுலிங்கில் நான் லீடராக செயல்படுவேன் ஆனால் இங்கிலாந்து அணியில் அப்படி அல்ல உலகத்தரமான பந்துவீச்சாளர்கள் பலர் அணியில் உள்ளதால் ஒவ்வொருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். பவர் பிளே ஓவர்களில் நான் பொதுவாக விக்கெட்டுக்களை எதிர் பார்ப்பது கிடையாது. டாட் பால்களை மட்டுமே வீச விரும்புகிறேன்.

archer

அப்படி நான் டாட் பால் வீசும்போது அதோடு கூடுதலாக விக்கெட்டுகள் கிடைக்கும் போது அது போனசாக அமைகிறது. மேலும் புது பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வரும் போது அது நமக்கு பந்துவீச சாதகமாக அமைகிறது என்றும் ஆட்டநாயகன் ஜாப்ரா ஆர்ச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement