இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயா முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து னகிரிக்கெட் அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் சென்னை ஆடுகளத்தை குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘நான் இதுவரை பார்த்த சர்பேஸ்களிளேயே மிகவும் மோசமான சர்பேஸ் என்றால் அது சென்னை சர்பேஸ் தான் ’ என்று ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் ஆடுகளம் குறித்து ஆர்ச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது இன்னும் எங்களார் நம்ப முடியவில்லை
“இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாளன்று சென்னை ஆடுகளம் நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான சர்பேஸாக இருந்தது. அந்த நாள் ஆட்டம் ஆரம்பித்தபோது நாங்கள் வெற்றி பெற ஒன்பது விக்கெட்டுகள் எங்களுக்கு தேவைப்பட்ட நிலையில் அதை எளிதில் எங்களால் எட்ட விட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. இருந்தாலும் இந்திய வீரர்கள் மிகவும திறமை வாய்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.
அது தவிர சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலமும் அவர்களுக்கு இருப்பதால் அதை செய்வது கொஞ்சம் கடினம் என்று எனக்கு தோன்றியது. அதனால் அவர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மதிய நேர டிரிங்க்ஸ் இடைவேளைக்கு பிறகே எங்களது வெற்றி உறுதியானது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை எங்களது பவுலர்கள் சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள் என்று ஆர்ச்சர் கூறினார்.
இந்தியா மாதிரியான மிகப்பெரிய திறன் படைத்த அணியை அதன் சொந்த மண்ணில் வென்ற அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் எங்களால் விவரிக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளது வரவேற்பினை பெற்றுள்ளது.