ஐ.பி.எல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல். முன்னணி அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு – விவரம் இதோ

rr
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் 2020 ஆம் ஆண்டுக்கான 13 வது சீசன் மார்ச் மாத இறுதியில் துவங்குகிறது. இது தொடருக்கான அணிகள் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றன. மேலும் இதுதொடர்பான வீரர்களின் ஏலம் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது.

rr 1

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டியும் பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு பெரிய சறுக்கலாக அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக கோப்பை தொடரில் முன்னணி பேட்ஸ்மேன்களை விரட்டிய ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதேபோல ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆட்டிப் பார்த்த அவர் 5 போட்டிகளில 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அவரது அசுர வேக பவுன்சரில் பேட்ஸ்மேன்கள் பலபேர் அடிவாங்கியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்காக தனது அறிமுக தொடர்களே அசத்திய ஆர்ச்சர் அந்நாட்டு கிரிக்கெட் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டது.

Archer

இந்நிலையில் தற்போது காயமடைந்துள்ள அவருக்கு பதிலாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஆர்ச்சருக்கு பதிலாக வேறுஒருவரை சேர்ப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட பதிவில் : ஆர்ச்சரின் வலது முழங்கை பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளது அதில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஐபிஎல் மற்றும் இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

மேலும் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய சிக்கல் உண்டாகி உள்ளது. ஏனெனில் அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கும் ஆர்ச்சர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement