இந்திய அணியில் நான் பார்த்து பந்துவீச பயப்படும் பேட்ஸ்மேன் இவர்தான் – ஜோப்ரா ஆர்ச்சர் வெளிப்படை

Archer
- Advertisement -

இங்கிலாந்து அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் ஜோப்ரா ஆர்ச்சர். இவர் உண்மையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்தவர். அந்த நாட்டிற்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடிவிட்டு அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்காமல் இங்கிலாந்து சென்று குடியேறியவர். இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணிக்காக ஆடி வருகிறார் .

Archer

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருபவர். அதி திறமை வாய்ந்தவராக கிரிக்கெட் வட்டாரங்களில் பார்க்கப்படுபவர் .இங்கிலாந்தில் தற்போது வசித்துவரும் இவர் லாக் டவுன் நேரத்தில் தனது ராஜஸ்தான் ராயல்ஸ் சக வீரரான இஷ் சோதியுடன் சமூகவலைதளத்தில் உரையாடினார். அப்போது இந்திய வீரர்களில் பந்துவீசிய மிகவும் கடினமான வீரர் யார் என்று அவரிடம் கேட்டார் இஸ் சோதி.

- Advertisement -

இதற்கு பதிலளித்த அவர் இந்தியாவின் துவக்க வீரராக இருந்த கேஎல் ராகுல் தான் மிகவும் கடினமான பேட்ஸ்மேன். அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம். நான் விளையாடிய அனைத்து டி20 லீக் தொடரிலும் சேர்த்து பந்துவீச மிகவும் கடினமான பேட்ஸ்மேன் அவர்தான் என்று கூறினார் ஜோப்ரா ஆர்ச்சர்.

Rahul1

பெங்களூரு அணியில் இருந்து தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார் ராகுல். ஐபிஎல் தொடரில் தனக்கென உள்ள திறமையை நிரூபித்து தற்போது இந்திய அணியில் மிக முக்கிய வீரராக இருக்கிறார். விக்கெட் கீப்பர் ஆகவும் செயல்பட்டு வருகிறார்.கடந்த வருடம் இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இ

- Advertisement -

ந்தியாவின் ஜாம்பவான் வீரர்கள் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இருகையில் கேஎல் ராகுல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சரியான கையில் உள்ளது என்பதைக் குறிக்கிறது. மேலும் தனது அசுர வேகத்தின் மூலம் உலக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வரும் ஆர்ச்சர் இளம் வீரர் ராகுலை கடினமான வீரர் என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rahul 1

இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் தனது அபாரமான பேட்டிங் மூலம் அசத்தி வருவது மட்டுமின்றி எந்த இடத்தில் இறங்கினாலும் அதற்கேற்றாற்போல் தனது பாணியை மாற்றி இந்திய அணிக்காக சிறப்பான ரன் குவிப்பை வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி இந்திய அணிக்காக தற்போது கீப்பிங்கும் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement