இரண்டாவது டெஸ்ட் : இங்கிலாந்து அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ

Archer

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசி ஓப்பனர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில்லை அவுட் செய்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஜோப்ரா ஆர்சர் பங்களித்தார். இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

archer 2

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் பயிற்சியின்போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் :

வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பயிற்சியின் போது வலது முழங்கையில் சிறிய காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் காயத்திற்கான சிகிச்சையை பெற்று வருவதார் சென்னையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பதிவிட்டுள்ளது.

Archer 3

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாமல் போன இச்செய்தி ஒருவகையில் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. ஆனாலும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் மீண்டும் அணிக்கு திரும்பி விளையாடுவார் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

archer 1

அகமதாபாத் மாநிலத்தின் மோதிரா மைதானத்தில் நடைபெறும் 3 ஆவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற காரணத்தினால் ஆண்டர்சன் மற்றும் ஆர்ச்சருக்கு ஓய்வு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.