நீண்ட நாட்களுக்கு பின் ஐபிஎல்க்கு திரும்பும் நட்சத்திரம் – தடுக்கும் இங்கிலாந்து நிர்வாகம் – காரணம் இதோ

Archer
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு மாநகரில் நடைபெற உள்ளது. இந்த வருடம் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் இம்முறை மெகா அளவில் நடைபெற உள்ள இந்த ஏலமானது பிப்ரவரி 12ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க உள்ளது.

Auction

- Advertisement -

முன்னதாக இந்த ஏலத்தில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1214 வீரர்கள் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதை ஆராய்ந்து தணிக்கை செய்த ஐபிஎல் நிர்வாகம் அதிலிருந்து 590 வீரர்கள் மட்டும் மெகா ஏலத்தில் பங்கேற்க தகுதியானவர்கள் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜோப்ரா ஆர்ச்சர் :
இந்த ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அதிகபட்ச விலை தொகையான 2 கோடி ரூபாய் பிரிவின் கீழ் பங்கேற்க விண்ணப்பம் செய்துள்ளார். கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர் அப்போது ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் 2021 மற்றும் டி20 உலககோப்பை 2021 தொடரில் இருந்து முற்றிலுமாக விலகினார்.

archer 1

அந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக காயத்திலிருந்து குணமடைந்தது வரும் அவர் அதிலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் சமீப காலங்களாக இங்கிலாந்து அணிக்காக கூட விளையாடவில்லை. இருப்பினும் அதிலிருந்து 99% குணமடைந்த காரணத்தால் மெகா ஏலத்தில் பங்கேற்க அவர் விருப்பத்துடன் விண்ணப்பித்துள்ளார்.

- Advertisement -

தடுக்கும் இங்கிலாந்து :
ஆனாலும் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் அவரை மெகா ஏலத்தில் விலைக்கு வாங்க விரும்பும் அணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளிடமும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஒருவேளை அவரை ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் துவங்கும் போதோ அல்லது பாதியிலோ அவர் காயம் அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக பாதியிலேயே விலகும் நிலை ஏற்பட்டால் அவருக்கு பதில் மாற்று வீரர் அனுமதிக்கப்பட மாட்டார் என 10 அணிகளுக்கும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

Archer

அத்துடன் 2023 மற்றும் 2024 சீசனில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாட உள்ளதால் ஐபிஎல் 2022 சீசனில் அவர் பங்கு பெறுவது சந்தேகம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளது. இது பற்றி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது பின்வருமாறு. “2023 மற்றும் 2024 சீசனில் முழுமையாக பங்கேற்பதற்காகவும் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தை கருதியும் 2022 சீசனில் அவர் பங்கேற்பது சந்தேகம்” என கூறியுள்ளது.

பங்கேற்பது சந்தேகம்:
இது பற்றி ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் ஐபிஎல் நிர்வாக கமிட்டி தலைமை இயக்குனர் ஹெமங் அமித் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “அவரின் (ஆர்ச்சர்) பெயர் ஏலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக அறிவிக்கபடும் வீரர்களின் பட்டியலில் அவர் இடம் பெற மாட்டார். ஏலம் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது அவரின் பெயர் அறிவிக்கப்படும். அப்போது அவரை யார் வாங்கினாலும் அவருக்கு உண்டான மாற்று வீரர் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்குப்பின் ஐபிஎல் தொடரில் அதிரடியான பந்துவீச்சாளராக கருதப்படும் ஜோஃப்ரா ஆர்ச்சர் பங்குபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

Archer 1

மேலும் வரும் ஏப்ரல் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளதால் ஐபிஎல் 2022 தொடரின் ஒரு சில போட்டிகளில் ஜோஸ் பட்லர், பேர்ஸ்ட்டோ, இயன் மோர்கன் போன்ற முக்கியமான இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க், வெஸ்ட்இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் போன்ற சில முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஐபிஎல் 2022 சீசனில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement