ஜோ ரூட் செய்த தவறு. அதிர்ஷ்டத்தால் கிடைத்த வாய்ப்பையும் தவறவிட்ட ரோஹித் சர்மா – என்ன நடந்தது ?

Rohith

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்கி தற்போது 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சின் முடிவில் 78 ரன்களை மட்டுமே குவித்தது.

Robinson-1

அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆனது 432 ரன்களை குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியை விட இங்கிலாந்து 354 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளதால் இந்திய அணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே முதலில் இந்திய அணி போராடியாக வேண்டும்.

- Advertisement -

அதன்படி தற்போது 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி ஆனது மூன்றாம் நாளில் மூன்றாவது செஷன் வரை 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்துள்ளது. ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதன்பிறகு ரோகித் சர்மா புஜாராவுடன் இணைந்து சிறப்பான சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தார். இந்த போட்டியில் 31.5 ஓவரின் போது ராபின்சன் வீசிய பந்தை ரோகித் கால் பேடில் வாங்கினார்.

rohith 1

மைதானத்தில் இருந்த அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. எனவே கேப்டன் ஜோ ரூட் சக வீரர்களிடம் ஆலோசித்து விட்டு ரெவியூக்கு செல்லலாம் என்று நினைத்த வேளையில் 15 நொடிகள் கடந்த பின்னர் நேரம் கடந்து ஜோ ரூட் மேல்முறையீடு செய்ததால் அம்பயர் அந்த டிஆர்எஸ் முடிவை ஏற்கவில்லை. ஒருவேளை அந்த 15 நொடிகளுக்குள் ரூட் டிஆர்எஸ் கேட்டிருந்தால் ரோகித் வெளியேறி இருப்பார்.

- Advertisement -

Rohith 1

ரீபிளேவில் பந்து ஸ்டம்பில் பட்டது தெளிவாக தெரியவந்தது. இதன்காரணமாக அதிர்ஷ்டவசமாக அந்த விக்கெட்டிலிருந்து தப்பிய ரோகித் பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக இங்கிலாந்து மண்ணில் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Advertisement