இந்தியாவில் இதை செய்வது ரொம்ப கஷ்டம். இந்த டெஸ்ட் தொடர் சவாலானது – ஜோ ரூட் பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

pant

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலும், இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியலும் இருநாட்டு கிரிக்கெட் சங்கங்களும் ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர், இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டியளித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணியுடனான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsENG

இது குறித்து அவர் கூறுகையில் : உலகின் தலைசிறந்த அணியான இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது என்பது சவாலான காரியம். மேலும் இந்திய மண்ணில் அவர்களை வீழ்த்துவது மிகப்பெரிய கஷ்டம். அவர்களுக்கு எதிராக நாங்கள் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளோம்.

Root

இந்திய மண்ணில் எங்கள் ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக விளையாடினால் தான் இந்தியாவை எங்களால் வெல்ல முடியும். ஏனெனில் நாங்கள் வெளிநாட்டில் தடுமாறி இருந்தாலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றுள்ளது எங்களால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது என்று ஜோ ரூட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement