இந்திய அணிக்கு எதிரா நாங்க இனிமே இந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டோம் – ஜோ ரூட் வேதனை

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது.

IND 1

- Advertisement -

இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு குறித்து பேசியுள்ளார். அது மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிராக இனி நாங்கள் ஒரு தவறை செய்யவே மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இனி நாங்கள் இந்திய அணிக்கு எதிராக சீண்டலில் ஈடுபட மாட்டோம். நாங்கள் இயல்பான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். ஏனெனில் சில நேரங்களில் கவனச்சிதறல் ஏற்படும் போது சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நாங்கள் நேர்மையாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம் என்று கூறியிருந்தார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் :

siraj 1

இந்திய அணி எப்படி வேண்டுமானாலும் விளையாடட்டும். அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை ஆனால் நாங்கள் இனிமேல் அவர்களை சீண்ட மாட்டோம். இனி வரும் போட்டிகளில் நல்ல முறையில் விளையாட முடிவெடுத்துள்ளோம். கடந்த போட்டியில் இந்திய அணியுடன் ஏற்பட்ட வாய் சண்டை, மோதல்களில் இருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக் கொண்டோம்.

Anderson

எனவே இனிவரும் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக சீண்டலில் ஈடுபடும் தவறை செய்யவேமாட்டோம் என ரூட் வேதனையுயுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை இழந்துவிட்டதால் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி இந்திய அணியை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே பெரிய விடயமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement