இந்திய அணியிடம் நாங்கள் அடைந்த தோல்விக்கு இவரது பவுலிங்கே காரணம் – ஜோ ரூட் வருத்தம்

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறுகையில் :

IND

- Advertisement -

இந்த இந்த தோல்வி எங்களை வருத்தமடைய செய்துள்ளது. எங்களால் கடைசி நாளில் போராட முடியும் என்று நினைத்தோம். அதேபோன்று இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறவும் வாய்ப்பு இருந்தது. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தும் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார்கள்.

குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா வீசிய ஸ்பெல் இந்த போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமின்றி நாங்கள் இந்த போட்டியில் சில வாய்ப்புகளை தவறவிட்டு உள்ளோம். இதுவே இந்திய அணிக்கு சாதகத்தை கொடுத்தது. முதல் இன்னிங்சின் போது நாங்கள் முன்னிலை பெற்றதால் இந்த போட்டியிலும் எங்களுக்கு சௌகரியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.

bumrah 3

ஆனால் 2வது இன்னிங்சின் போது இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி பந்து வீச்சிலும் அபாரமாக செயல்பட்டது. நிச்சயம் இந்திய அணியில் இருப்பது ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு கூட்டணிதான். இந்த மைதானத்தில் அவர்கள் பந்து வீசிய விதம் நிச்சயம் பாராட்ட வேண்டியது.

Root

இப்படி இந்திய பந்துவீச்சாளர்களை பாராட்டிய ஜோ ரூட் நிச்சயம் கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் வலுவாக திரும்புவோம் என்று கூறினார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 10 ஆம் தேதி ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

Advertisement