பிங்க்பால் டெஸ்ட் : தோல்விக்கு காரணத்தை கூறியது மட்டுமின்றி 2 இந்திய வீரரர்களை பாராட்டிய – ஜோ ரூட்

Root

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி கடந்த 24ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களை குவிக்க அடுத்ததாக இந்திய அணி 145 ரன்கள் குவித்தது. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ind

அதனை தொடர்ந்து 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த இந்த ஆடுகளத்தில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த மைதானம் மீது பலரும் தங்களது அதிர்ப்தியான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறுகையில் : நாங்கள் 70 ரன்கள் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தோம். அதனை நாங்கள் அதிக ரன்களாக மாற்றிக்கொள்ள தவறிவிட்டோம்.

IND

250 ரன்கள் வரை அடித்திருந்தால் இந்த போட்டியில் நிச்சயம் வித்தியாசம் இருந்திருக்கும் இந்திய அணியை நாங்கள் நிச்சயம் 250 ரன்கள் அடித்து இருந்தால் திருப்பி அவர்களை கட்டுப் படுத்து இருப்போம். இரு அணிகளிலும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. மேலும் இரு அணி வீரர்களும் விக்கட்டுகளை காப்பாற்றுவதில் கஷ்டப்பட்டனர். நாங்கள் கடைசி போட்டியை பற்றியோ அல்லது கடந்த சில போட்டிகளில் பற்றியோ நினைக்க விரும்பவில்லை.

- Advertisement -

ishanth 1

இந்த போட்டி முழுவதும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார். நான் குறிப்பிட்டு சொல்ல விரும்பு வேண்டிய இரண்டு நபர்கள் ஒன்று இசாந்த் சர்மா 100 டெஸ்டில் விளையாடியது, மற்றொன்று அஸ்வின் 400 விக்கெட்டுகளை கைப்பற்றியது அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று ரூட் கூறியது குறிப்பிடத்தக்கது.