லார்ட்ஸ் டெஸ்ட் : தோல்விக்கு பிறகு ஜோ ரூட் என்னவெல்லாம் சொன்னார் தெரியுமா ? – விவரம் இதோ

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முடிவு பெற்றது. இந்த இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்கள் குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

indvseng

- Advertisement -

அடுத்ததாக இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி விரைவாக 6 விக்கெட்டுகளை இழக்க இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷமி மற்றும் பும்ரா ஆகியோரின் சிறப்பான பேட்டிங் காரணமாக இங்கிலாந்து அணிக்கு 271 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

ஆனால் இரண்டாவது இன்னிங்சில் 120 ரன்களில் இங்கிலாந்து அணியை ஆட்டமிழக்க செய்து 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறுகையில் : எங்களால் இந்த போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போனது, இது எங்களுக்கு மிகவும் வருத்தமான ஒன்று.

shami 2

இருப்பினும் இந்த தொடரில் இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன. நாங்கள் இந்த போட்டியில் வலுவான நிலையில் இருந்து எங்களது வெற்றி வாய்ப்பை இழந்தது வருத்தத்துக்குரிய ஒன்று. சில விடயங்கள் இந்த போட்டியின் போது நாங்கள் தவறாக செய்து விட்டோம். ஷமி மற்றும் பும்ரா ஆகியோரது பார்ட்னர்ஷிப் இந்த போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. நாங்கள் அவர்களுக்கு எதிராக புதிதாக சில செயல்களை நினைத்து அவர்களுக்கு வாய்ப்பை அளித்து விட்டோம்.

இருப்பினும் இந்த தொடரில் மீதம் 3 போட்டிகள் உள்ளது. எனவே தற்போதைக்கு அமைதியாக இருந்து பதட்டம் அடையாமல் இருக்க வேண்டும். மீண்டும் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என ரூட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement