லீட்ஸ் டெஸ்ட் : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – ஜோ ரூட் மகிழ்ச்சி

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்கி நேற்று நான்காம் நாளன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களில் ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியானது இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் 278 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

Kohli

- Advertisement -

இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் எடுத்திருந்தது.

இப்படி பலமாக இருந்த இந்தியானது இன்று மேலும் 63 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் மீதமுள்ள 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாப தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் வெற்றி பேசுகையில் கூறியதாவது : இந்த போட்டியில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களது முழுமையான திறனை வெளிக்காட்டினர்.

robinson

எங்களது பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை கட்டுக்குள் வைத்து அவர்களை வீழ்த்தினர். எங்களிடமிருந்து இதுபோன்ற சிறப்பான ஆட்டம் வரும் என்பது எங்களுக்கு தெரியும். எங்கள் அணியில் உள்ள அனைவருமே திறமையான வீரர்கள். அந்த வகையில் இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். முதல் இன்னிங்சில் போது துவக்கம் சரியாக இருந்ததால் எங்களால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடிந்தது.

Eng-1

அதேபோன்று பந்துவீச்சில் எங்கள் அணியின் முன்னணி வீரராக ஜேம்ஸ் ஆண்டர்சன் ஏன் திகழ்கிறார் என்பதை இந்த போட்டியின் மூலம் அவர் நிரூபித்துள்ளார். அதுமட்டுமின்றி டேவிட் மலான் அவரது அனுபவத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று ராபின்சன் எவ்வளவு திறமையானவர் என்பதையும் இந்த போட்டியில் காண்பித்தார். இப்படி எங்கள் அணியில் உள்ள அனைவரும் இந்த வெற்றிக்கு பங்களித்துள்ளதால் நாங்கள் சிறப்பான வெற்றி பெற்றுள்ளோம் இந்த வெற்றியை அப்படியே தொடர விரும்புகிறோம் எனவும் ஜோ ரூட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement