இரண்டாவது டெஸ்ட் போட்டி : முதல் பந்தில் இருந்தே கோலி இதனை செய்ய நினைப்பார் – ஜோ ரூட் வெளிப்படை

Root
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 277 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதமடித்து அசத்தினார்.

Root

- Advertisement -

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு நேற்று ஆன்லைன் மூலமாக பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் “நாளையப் போட்டியில் முதல் பந்தில் இருந்தே விராட் கோலி எங்கள் அணிக்கு அழுத்தம் கொடுப்பார் என்று நம்புகிறேன். நாளையப் போட்டியில் டாஸ் யார் வென்றாலும் இது கண்டிப்பாக நான் சொன்னது நடக்கும். உள்நாட்டில் பல போட்டிகளில் ஆடி வியக்க வைக்கும் பல பிரமாதமான சாதனைகளைச் செய்தவர் விராட் கோலி.

இந்தத் தொடரின் எதாவது ஒரு தருணத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என கோலிக்கு நன்றாகவே தெரியும்” என்றார். இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலே எங்கள் ஆட்டத்தின் அணுகுமுறை இருக்கும்.

Bumrah

மேலும் “இலங்கையில் நடைபெற்ற தொடரில் எப்படி நாங்கள் வெற்றிப்பெற்றோமோ அதேபோல வெற்றியை இங்கும் நாங்கள் தொடர விரும்புகிறோம். எப்படிப்பட்ட பிட்சாக இருந்தாலும் எந்த குழப்பமுமமின்றி பயமில்லாமல் கிரிக்கெட்டை விளையாடவே நாங்கள் முடிவு செய்துள்ளோம். எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலே எங்கள் ஆட்டத்தின் அணுகுமுறை இருக்கும். இதுபோன்ற பார்முலாதான் எங்களுக்கு கடந்து வந்த காலங்களில் வெற்றியை தேடி கொடுத்தது” என்றார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.

pant 2

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று 13 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement